கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், அருமனை - அண்டுகோடு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். களக்காடு தமிழ்நாடு கிராம வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லிபினா. களியக்காவிளை தலைமை தபால் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சுபாஷ் களக்காடு பகுதியில் தங்கி வேலை பார்பதால் லிபினா அருமனை பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.
தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி அண்டுகோடு பகுதியில் உள்ள இவர்களின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் மொத்தம் இருந்த 66 பவுன் நகையில், 35 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இது குறித்து சுபாஷ், லிபினா தம்பதி அருமனை போலீசார் இடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அருமனை போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வந்ததில், அதே பகுதியை சார்ந்த ரப்பர் பால்வெட்டு தொழிலாளியான விஜயகுமார் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து விஜயகுமாரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பால் வெட்டும் தொழிலாளியான விஜயகுமார் அவ்வப்போது கேரளா பகுதிக்கு செல்லும்போது திருவனந்தபுரம் பகுதியை சார்ந்த கொத்தனாரான ராஜன் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டது தெரிந்தது.
இதையும் படிங்க: ஏமாத்துறதுல புது டெக்னிக்கா? முதியோர் இல்லத்தில் மோசடி.. போலி CRPF வீரர் கைவரிசை..!

இருவரும் நெருங்கி பழகிய நிலையில், இருவருக்கும் திடீர் பணக்காரனாக வாழ வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு உள்ளது. செய்யும் தொழில் வழியாக பணக்காரன் ஆக முடியாது என நினைத்துக் கொண்ட இருவரும், திருட்டு தொழில ஈடுபடலாம் என முடிவு செய்துள்ளனர். இதில் முதல் முயற்சியாக பல நாட்கள் காத்திருந்து திட்டமிட்டு ஆட்கள் யாரும் இல்லாத வீட்டை பார்த்து, அண்டுகோடு பகுதியில் உள்ள வங்கி மேலாளரின் வீட்டில் கொள்ளையடிப்பது என முடிவானது. சம்பவத்தன்று முழுபோதையில் சுவர் ஏறி குதித்து திருட்டை அலர்ட்டாக அரங்கேற்றி உள்ளனர்.

அங்கிருந்த சில ஆபரணங்கள் போலி என நினைத்து, அதை அந்த வீட்டுக்குள்ளேயே பல பகுதிகளில் வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். திருடிய ஆபரணத்தை சமமாக பங்கிட்டு கொண்டு இருவரும் பிரிந்து சென்று சுகபோக வாழ்க்கை நடத்தியுள்ளனர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணயில் தெரியவந்தது.
விசாரணையில் இதை தெரிந்து கொண்ட போலீசார், திருவனந்தபுரம் நண்பரான ராஜனை மறுபடியும் அழைத்து மற்றொரு பகுதியில் திருட செல்லலாம் எனக்கூறி வலைவீசி வரவழைத்துள்ளனர். தொடர்ந்து குமரி - மேற்புறம் பகுதியில் வந்த ராஜனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இதனை அடுத்து இவர்களிடமிருந்து 20 பவன் தங்க நகைகளையும் கைப்பற்றி குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் இளைஞர் கொலை.. டாஸ்மாக்கை அடித்து உடைத்த மக்கள்.. குற்றவாளிகள் கைது..!