நடிகை யாஷிகா ஆனந்த் மீண்டும் பழைய ஃபாமுக்கு வர முயன்று வரும் நிலையில்... தற்போது பாவாடை தாவணியில் இளம் நெஞ்சங்களை ஏங்க வைக்கும் அளவுக்கு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

13 வயதிலேயே பட வாய்ப்பு தேட துவங்கிய யாஷிகா ஆனந்துக்கு, காமெடி நடிகர் ஒருவரின் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், முதல் படத்திலேயே சில பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் முற்றும் நெருக்கடி... பிளவராகவே மாறிய ஃபயர்... இழப்பீட்டை ரூ.2 கோடியாய் உயர்த்திய அல்லு அர்ஜூன்..!

அந்த பின்னர் நடிகர் ஜீவா நடித்த, 'கவலை வேண்டாம்' படத்தில், ஸ்விம்மிங் கோச் ரோலில் நடித்தார். இவரது ரோல் கவனிக்கப்படவில்லை என்றாலும், இந்த படத்தை தொடர்ந்து யாஷிகா நடித்த 'துருவங்கள் 16' படத்தின் ஸ்ருதி கேரக்டர் கவனம் பெற்றது.

ஆனால், யாஷிகாவை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் தான். இந்த படத்தில் நடித்ததால் 'ஏ' பட நடிகை என்று, யாஷிகா மீது முத்திரை குத்தப்பட்ட நிலையில், இதை தகர்த்தெறிவதற்காக யாஷிகா தேர்வு செய்த களம் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்.

அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடிய யாஷிகா, ஒரு வலுவான போட்டியாளராக பார்க்கப்பட்டாலும், இவரின் இளகிய மனதும், பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த நட்பும் இவருக்கே எதிராக திரும்பியது. பிக்பாஸ் வீட்டில் இருந்து 98-ஆவது நாளில் வெளியேறினார்.

இதன் பின்னர், டைட்டில் வின்னர் ரித்விக்காவை விட இவருக்கு தான் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மொத்தம் 10 படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்த நேரத்தில், பெங்களூரில் இருந்து வந்த தன்னுடைய தோழியை அழைத்து கொண்டு புதுவையில் பார்ட்டி செய்துவிட்டு சென்னை திரும்பி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில், இடுப்பெலும்பு நொறுங்கி, அவரின் கால் எலும்பும் உடைந்தது. யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் இருந்து யாஷிகா வெளியே வர ஒரு வருடம் ஆனது. அதே போல் இவர் கமிட் ஆன படங்களில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.

யாஷிகாவின் திரையுலக வாழ்க்கையை இந்த விபத்து திருப்பி போட்ட நிலையில், தற்போது மீண்டும் அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அதன்படி, யாஷிகா பழைய ஃபாமுக்கு திரும்பி விதவிதமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது செலபிரேஷன் மோடில், சிவப்பு நிற கிராண்ட் பாவாடை தாவணி அணிந்து, யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள போட்டோஸ் இளம் நெஞ்சங்களை ஏக்கத்தோடு பார்க்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: நடிகை நக்மாவும்... 4 காதலர்களும்... நுகர நுகர வாசனை... 50 வயதில் தனிமையில் யோசனை..!