தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முட்டுக்கட்டை போட்டு வந்த தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பதவி தருவதாக வாக்குறுதி கொடுத்தே பதவியை பறித்ததாகக் கூறப்படுகிறது. பதவி இழந்த பிறகு அண்ணாமலையை யாரும் கண்டுகொள்வதில்லை என்கிற வருத்தமும் அவருக்கு இருந்து வந்தது என்கிறார்கள்.

இதனால், விரக்தியோடு இருந்து வந்த அவர் தனது இருப்பை காட்டிக் கொள்ளவே அவ்வப்போது அறிக்கை விட்டு வருகிறார். தேசிய அளவில் பதவி இன்னும் தரவில்லை என்கிற விரக்தியை தேசிய தலைமையிடம் காட்டி விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்து வருகிறார். அதோடு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்கிற முடிவிலும் இருக்கிறார் என்கிறார்கள். இதற்கு பின்னால் மிகப்பெரிய தந்திரம் இருக்கிறது என கட்சி நிர்வாகிகள் பேசிக்கொள்கிறார்கள். அதாவது அதிமுக கட்சியில் தலைமையை பற்றி தலைவராக இருந்தபோது கடுமையான விமர்சனம் செய்தும், ஒருமையிலும் பேசியும் வந்தார் அண்ணாமலை.
இதையும் படிங்க: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு..! அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி..!

இதையெல்லாம் மனதில் வைத்து அதிமுகவினர் தன்னை நிச்சயம் பழிவாங்குவார்கள் என்கிற பீதி அண்ணாமலைக்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து தோல்வியை தழுவினால் தனது பில்டப் இமேஜ் மொத்தமாக காலியாகி விடும் என்பதால் வெளிமாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு போவதுதான் பாதுகாப்பு எனக் காத்திருந்தார். தற்போது பாஜக தலைமையும் இறங்கி வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தற்போது ஆந்திராவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் அண்ணாமலை. மத்திய உள்துறை இணை அமைச்சராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து திமுகவின் ரகுபதி, ராதிகா செல்வி போன்றோர் மத்திய உள்துறை இணை அமைச்சர்களாக இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியா நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க! தரமான பதிலடி இருக்கு.. அண்ணாமலை பரபர பேச்சு..!