பலூச் விடுதலைப் படையில் ஏராளமான தற்கொலை படையினர் உள்ளதால், புதிய ஆட்சேர்ப்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாக பாகிஸ்தான் எம்.பி ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். அவரது இந்தத் தகவலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேசியக் கட்சியின் எம்.பி.,யான ஃபுலான் பலோச், பலூச் விடுதலை படையில் தற்கொலை படையினரை அதிகமாகக் கொண்டிருப்பதால், தற்போதைக்கு ஆட்சேர்ப்பை நிறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். இது பலூச் விடுதலை படை, பாகிஸ்தானுக்கு எவ்வாறு தலைவலியாக மாறியுள்ளது என்பதையும், எதிர்காலத்தில் பாகிஸ்தானில் இன்னும் எத்தனை குண்டுவெடிப்புகள் நடக்கப் போகின்றன என்பதையும் எச்சரித்துள்ளது.

தேசிய சட்டமன்றத்தில் பேசிய எம்.பி. ஃபுலான் பலோச், ''பலுசிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இனி தங்கள் தொகுதிகளுக்கு பாதுகாப்பாக பயணிக்க முடியாது என்றும் எச்சரித்தார். நாடாளுமன்றத்தில் பேசிய பலோச், ''உள்ளூர் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் அளிக்கவும், பிராந்தியத்தின் நீண்டகால பிரச்சினைகளைத் தீர்க்கவும், உண்மையான தேர்தல்களை நடத்துவது முக்கியம். சட்டம்- ஒழுங்கை மீட்டெடுப்பதற்கு முதலமைச்சர் சர்பராஸ் புக்தி மட்டுமே பொறுப்பல்ல.இது ஒரு கூட்டுப் பிரச்சினை, இதற்கு விரிவான தீர்வுகள் தேவை" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: #Breaking: பாகிஸ்தானில் அடுத்த கொடூரத் தாக்குதல்: 90 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..?

இன்றும் கூட பாகிஸ்தானில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதற்கு பலூச் விடுதலை படை பொறுப்பேற்றுள்ளது. பலுசிஸ்தானின் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று எஃப்சி கான்வாய் அருகே நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் ஏழு எல்லைப் படை (எஃப்சி) வீரர்கள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், 90 வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை படை கூறுகிறது.

ஒரு பேருந்தில் ஒரு பெரிய குண்டு வெடிப்பு நடப்பதைக் காட்டும் சில வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. அதிகாரிகளின் தகவல்படி, தடைசெய்யப்பட்ட பலுசிஸ்தான் விடுதலை படை இப்போது பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இன்றைய சம்பவம் ஒரு தற்கொலைத் தாக்குதல் என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக நோஷ்கி ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஜபருல்லா சுமலானி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், பலூச் இயக்கம் தற்போது பழங்குடி தலைமையில் இருந்து விலகிவிட்டதாகவும், மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட படித்த இளைஞர்களால் இப்போது அது வழிநடத்தப்படுவதாகவும் எம்.பி. பலூச் கூறினார். அவர்கள் திட்டமிட்டு பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர், இதன் காரணமாக பாகிஸ்தானில் தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடந்து வருகின்றன.

நாடாளுமன்றத்தில் பேசிய எம்.பி. பலோச், "பலுசிஸ்தானில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மக்களும் காணவில்லை. பலுசிஸ்தானில் இளைஞர்கள் கட்டாயமாக காணாமல் போவது மிகவும் கடுமையான பிரச்சினை. ஒரு இளைஞன் 11 ஆண்டுகளாக காணாமல் போனான். பின்னர், அந்தக் கோபத்தின் காரணமாக, அந்த இளைஞனின் வீட்டிலிருந்து மூன்று வெவ்வேறு நபர்கள் தற்கொலை படையில் சேர்ந்துள்ளனர்'' என அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: ராணுவத்தின் பொய்யும்… புரட்டும்... அம்பலப்படுத்திய பாகிஸ்தான் முன்னாள் அதிகாரி..!