திமுக அமைச்சரவையில் இன்னும் ஒரு சில தினங்களிலே மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏனெனில் அதற்கேற்ப பல அழுத்தங்கள் நீதிமன்றம் மூலமாக கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக செந்தில் பாலாஜி தற்பொழுது மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய்வுத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். அவர் வரும் திங்கட்கிழமைக்குள் ஜாமீனா, அமைச்சர் பதவியா என முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவிலிருந்து அவரை நீக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுகவில் தொடர்ந்து பல மூத்த அமைச்சர்கள் குறித்து ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்டை முதலமைச்சர் எடுத்திருக்கிறார். அந்த அந்த ஸ்பெஷல் ரிப்போர்ட்டின் அடிப்படையிலே தற்போது பல மாற்றங்களை செய்ய அவர் திட்டமிட்டுருப்பதாக கூறப்படுகிறது. சில மூத்த அமைச்சர்களுக்கு பொறுப்பு மாற்றப்படும் என்றும், சில புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றெல்லாம் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த பட்டியலில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி டாப்பில் உள்ளனராம். பொன்முடி ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருடைய கட்சி பொறுப்பும் பறிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது அவர் மீது வழக்குகள் தொடர வேண்டும் என நீதிமன்றங்களே அழுத்தம் கொடுத்து வருகின்றன. எனவே நிச்சயமாக பொன்மொழி அமைச்சர் பதவியை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதேபோன்று செந்தில் பாலாஜி நிச்சயமாக இன்னும் ஓரிரு தினங்களுக்குள் ராஜினாமா அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: வக்கில்லாத திமுக அரசு... முதல்வர் மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!
அதேபோன்று ஆர்.காந்தி கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக இருக்கிறார். அவருடைய செயல்பாடுகளிலோ பெரிய அளவில் மாற்றமில்லை. அவரது கட்சிப் பணிகளிலும் பெரிய ஈடுபாடு காட்டுவதில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. எனவே அமைச்சர் பதவியில் சிறப்பாக அவர் செயல்படவில்லை என்பதால் அவருடைய பதவியும் பறிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோன்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜ் செயல்பாடும் சீராக இல்லை. அதாவது பாராட்டக்கூடிய அளவில், மெச்சத் தகுந்த நிலையில் இல்லை என்பதால் அவருடைய பதவியும் பறிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. எனவே செந்தில் பாலாஜி, பொன்முடி, கயல்வழி செல்வராஜ் மற்றும் காந்தி ஆகிய நாள்வரின் அமைச்சர் பதவிகள் பாதிக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இந்த 4 அமைச்சர்கள் மட்டுமின்றி மேலும் இரண்டு அமைச்சர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் மூர்த்த் ஆகியோர் பதவி நீக்கப்படலாம் அல்லது வேறு பதவிக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மா.சு. பெயரிலே பெரிய அளவு எந்த குற்றச்சா பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அவருடைய எந்த குற்றச்சாட்டும் அவர் மீது இல்லை. ஆனால் இந்த அண்ணா பல்கலைக்கழக பாலியல் தீண்டல் பிரச்சனையிலே பெயர் பெரிதாக அடிப்பட்டது. இதனால் அவர் மேல் ஒரு அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவருடைய பதவி பறிக்கப்படாது. ஆனால் அவருடைய பொறுப்பு மாற்றப்படலாம் எனக்கூறப்படுகிறது. சுகாதார துறையிலிருந்து வேறு துறைக்கு மாற்றப்படலாம் எனக்கூறப்படுகிறது.

அதேபோன்று மூர்த்தியின் மேல் பல ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அது குறித்து முதலமைச்சருக்கு வந்த அந்த மூன்று வகையான ரிப்போர்ட் அவருக்கு வந்திருக்கிறது. மூன்று துறைகள் மூலமாக உளவுத்துறை மற்றும் திமுக தரப்பிலே ஒரு ஒரு சர்வே வந்திருக்கிறது. எனவே இதுபோன்ற சர்வேகளை வைத்து முதலமைச்சர் முடிவெடுக்க இருக்கிறார். எனவே நிச்சயமாக மூர்த்தியினுடைய பொறுப்பும் மாற்றப்படலாம் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுக அமைச்சர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!