மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக துரை வைகோ அறிவித்துள்ளார். இது மதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உட்கட்சி பூசலால் துரை வைகோ ராஜினாமா செய்தது வைகோ உள்ளிட்டோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், துரை வைகோவிடம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, இது உட்கட்சி விவகாரம்., எங்களுடைய இயக்க தலைமை நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்றும், பதவி விலக என்ன காரணம் என்பது அறிக்கையில் தெளிவாக இருக்கிறது எனவும் கூறினார். நாளை நிர்வாக குழு கூட்டம் நடக்கும்பொழுது கட்சியில் நிர்வாகிகள் என நினைக்கிறார்கள்? கட்சித் தொண்டர்கள் என நினைக்கிறார்கள் என்பது தெரியவரும் என்றும் அப்போது தான் இறுதி முடிவு எட்டப்படும் எனவும்., என்னை பொருத்தவரை கட்சி பொறுப்பில் நீடிக்க விருப்பமில்லை எனவும் கூறினார்.
இதையும் படிங்க: திடீரென மோடியை புகழ்ந்து தள்ளிய பிரேமலதா விஜயகாந்த்.. பாஜகவுடன் தேமுதிக கூட்டணியா..?

இயக்கமென்றால் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.,இது என்னுடைய தனிப்பட்ட முடிவு., நான் பதவியில் இருக்க போய் தானே இவ்வளவு பிரச்சனை வருகிறது., நான் எப்போதும் இயக்கத் தொண்டனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சிக்கு உறுதுணையாக இருப்பேன்., கட்சி பொறுப்பு தனக்கு தேவையில்லை என்பதுதான் என்னுடைய கருத்து என தெரிவித்தார். தேர்தல் அரசியல் தனக்கு வேண்டாம் என்று கூறியபோதும் தன்னை நிறுத்தியதாகவும், தலைமையின் கட்டளையை ஏற்று நின்றதாகவும் கூறினார். தான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனம் திறந்து பேசியுள்ளார் துரை வைகோ...
இதையும் படிங்க: எதையுமே என்னால சொல்ல முடியாது! பேச மறுக்கும் வைகோ...உட்கட்சி பூசலால் குழப்பமா?