சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு படி இன்று நள்ளிரவு முதல் ஜூன் மாதம் இறுதி வரை சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீலகிரிகக்கோள் வர புதிய கட்டுபாடு அமலுக்கு வருகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு படி கடந்த ஆண்டு மே 7-ந்தேதி முதல் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இபாஸ் கட்டாயமாக்கபட்டுள்ளது.

தற்போது வரை விண்ணப்பிக்கும் அனைத்து சுற்றுலா வாகனங்களுக்கும் இபாஸ் வழங்கபட்டு வரும் நிலையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மேலும் ஒரு கட்டுபாட்டை கடந்த மாதம் விதித்தது.
இதையும் படிங்க: அடுத்த 3 மாதத்திற்கு நீலகிரியில் படப்பிடிப்புகளுக்கு தடை.. சுற்றுலாப் பயணிகளுக்கே முக்கியத்துவம்..!

அதன்படி ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு மட்டுமே இ பஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும்.
ஆனால் இந்த கட்டுப்பாடுகள் நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்று அவசரக்கால வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கு இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நள்ளிரவு முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவள்ள நிலையில் நீலகிரி மாவட்ட எல்லை உள்ள கல்லாறு, குஞ்சபனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், கேரம்பாடி, நாடுகாணி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட சோதனைசாவடிகளில் இ-பாஸை தீவிரமாக சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்தம்பிக்கப்போகும் நீலகிரி... ஏப்ரல் 2ம் தேதி நடக்கப்போகும் அதிரடி.. வணிகர்கள் சங்கம் கொந்தளிப்பு...!