இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு எந்திரங்கள் எளிமையானவை, துல்லியமானவை, சரியாநனவை யாராலும் ஹேக் செய்ய முடியாது. இன்டர்நெட், வைபை மூலம் இயங்காது என்று இந்தியத் தேர்தல் ஆணையம், அமெரிக்க உளவுத்துறைக்கு பதில் அளித்துள்ளது.
அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி ஹப்பார்டு “மின்னணு வாக்கு எந்திரங்களை எளிதாக ஹேக்கிங் செய்துவிடலாம்” எனத் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி ஹப்பார்டு கடந்த இரு நாட்களுக்கு முன், பேசுகையில் “அமெரிக்க கேபினெட் கண்டறிந்த வகையில் மின்னணு வாக்கு எந்திரங்கள் எளிதாக ஹேக்கிங் செய்ய முடியும் என்று கண்டறிந்து ஆதாரங்களைத் திரட்டியுள்ளது. தேவைக்கு ஏற்ப தேர்தல் முடிவுகளையும் மாற்றிக்கொள்ளவும் மின்னணு வாக்கு எந்திரங்களால் முடியும். அமெரிக்க தேர்தல் நேர்மையாக நடக்கிறது என்பதை வாக்காளர்கள் நம்புகிறார்கள். நாடு முழுவதும் காகித வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துவதுதான் சரியானது” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: அமெரிக்க தேசிய உளவுப் பிரிவு தலைவருக்கு கலசத்தை கொடுத்த மோடி... உள்ளே என்ன இருக்கு தெரியுமா?
கடந்த ஆண்டு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வெளியிட்ட ஒருபதிவில் “மின்னணு வாக்கு எந்திரங்களை நீக்க வேண்டும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஹேக் செய்ய வாய்ப்புள்ளது. ஐடி வல்லுநர் ஒருவர் மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்து பேசுகையில் தேர்தல் நடக்கும்போது மின்னணு வாக்கு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும் அதனால்தான் எங்களின் வாக்கு எந்திரங்கள் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அவ்வப்போது மின்னணு வாக்கு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி ஹப்பார்டுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் “இந்திய தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மின்னணு வாக்கு எந்திரங்களில் பல்வேறு கலவை தொழில்நுட்ப முறைகள் உள்ளன.
எங்கள் வாக்கு எந்திரத்தை தனியார் நெட்வொர்க், இணையதளம், வைபை ஆகியவற்றால் இயக்க முடியாது. நாங்கள் பயன்படுத்தும் வாக்கு எந்திரம் எளிமையானது, துல்லியமானது, சரியானது.
வாக்கு எந்திரத்தில் பட்டனில் வாக்கு செலுத்தியவுடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யவும், மனநிறைவு தரவும் விவிபிடி எந்திரங்களும் உள்ளன. 100 கோடி வாக்குகளையும் ஒருநாளில் எண்ணிவிடலாம். இந்த வாக்கு எந்திரங்கள் வைத்து பாதுகாக்கப்பட்டு வரும் அறை வலிமையானது, உயர் அதிகாரிகள் கண்காணிப்பில் வாக்கு எந்திரங்கள் பாதுகாக்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் பலமுறை மின்னணு வாக்கு எந்திரத்தின் நம்பகத்தன்மை பரிசோதிக்கப்பட்டுள்ளது, தேர்தலுக்கு முன்பாக மாதிரி தேர்தலும் நடத்தப்பட்டு வாக்கு எண்ணிகை நடந்துள்ளது. ஏறக்குறைய 5கோடி விவிபிடி சிலிப்புகள் சரிபார்க்கப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: என்னை வழிநடத்துவதே கிருஷ்ணரின் போதனைகள்தான்: அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் பெருமிதம்..!