சென்னை, பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூர் அருள் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சீதா லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 33. திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றவர். குடும்பச் செலவுக்கான பெல்ட், பர்ஸ் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வந்தார்.
அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவரை பிரிந்த 11 மாதங்கள் ஆன நிலையில், சீதா லட்சுமி வேறு ஒருவருடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர், அதே பகுதியில் தண்ணீர் டேங்கர் லாரியில் டிரைவராக பணியாற்றி வந்த ஞான சித்தன் என்பவருடன் பழகி வந்துள்ளார். இருவருக்கும் இடையில் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

தனது வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தனது இரண்டு குழந்தைகளையும் அடைத்து வைத்துவிட்டு, சீதா லட்சுமி ஞானசித்தனுடன் மதுகுடித்தும், திருமணத்திற்கு மீறிய உறவிலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீதா லட்சுமி வீட்டிற்கு நேற்று ஞானசித்தன் வந்துள்ளார்.
அப்போது சீதா லட்சுமி வேறு ஒருவருடன் போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஞான சித்தன், சீதா லட்சுமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு ஞானசித்தன் சென்று மது வாங்கி வந்துள்ளார். சீதா லட்சுமி தனது பிள்ளைகளை வேறொரு அறையில் பூட்டிவிட்டு, ஞான சித்தனுடன் மது அருந்தியுள்ளார்.
இதையும் படிங்க: பயமுறுத்த தான் குத்துனோம்.. செத்துடுவான்னு நினைக்கல சார்.. இளைஞர் கொலையில் குற்றவாளிகள் வாக்குமூலம்..!

மதுபோதையில் மீண்டும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சீதா லட்சுமி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக கூறி ஞானசித்தன் பிரச்னை செய்துள்ளார். வேறு ஒருவருடன் பாக்கியலட்சுமி போனில் பேசியதை சுட்டிக்காட்டி சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது ஞானசித்தன் கோபத்தில் அருகில் இருந்த கடப்பா கல்லை எடுத்து, சீதா லட்சுமியின் தலையில் பலமுறை அடித்துள்ளார். அதனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலைக்குப் பிறகு, ஞான சித்தன் நேராக சங்கர் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று, தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, சீதா லட்சுமியின் உடலை கைப்பற்றினர்.
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து உதவி கமிஷனர் வெங்கட்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன், விசாரணை நடத்தினார். சங்கர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீதா லட்சுமி கொலை செய்யப்பட்டதால் அவரின் இரண்டு குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சீதா லட்சுமிக்கு சில ஆண் நண்பர்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது.
சம்பவத்தன்று இரவு பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவரிடம்தான் சீதா லட்சுமி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் என்று தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.இந்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வக்கீல் சடலம்.. தலையில் பதிந்திருந்த அரிவாள்.. விருகம்பாக்கத்தில் பயங்கரம்..!