மகாராஷ்டிராவில் ஒன்றாம் வகுப்பு முதல் இந்தியை 3வது மொழியாகக் கட்டாயப்படுத்தும் மாநில அரசின் நடவடிக்கையை ஏற்க முடியாது. இந்தியை கட்டாயப்படுத்தினால், மாநிலத்தில் போராட்டம் வெடிக்கும் என நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரே எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஒன்றும் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இந்தி மொழி கட்டாயம் என்று மாநில அரசு நேற்று அறிவித்தது. இந்த உத்தரவு 2025-26 கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என மாநில அரசு அறிவித்தது. இதை கடுமையாக விமர்சித்துள்ள நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்ரே எக்ஸ் தளத்தில் மாநில அரசுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
இதையும் படிங்க: நாக்பூர் கலவரம் எதிரொலி.. சொன்னதை செய்தார் பட்னாவிஸ்.. மகாராஷ்டிராவில் புல்டோசர் கலாச்சாரம்..!
நான் தெளிவான வார்த்தைகளில் கூறுகிறேன், மாநில அரசு இந்தி மொழியை திணித்தலை ஒருபோதும் நவநிர்மான் சேனா ஏற்காது. மகாராஷ்டிராவில் இந்தியை புகுத்திவிட்டோம், இந்தியை தேசம் முழுவதும் கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சிகளை ஏற்கமாட்டோம். இந்தி தேசிய மொழி அல்ல. மற்ற மொழிபோல் இது ஒரு மாநில மொழி. பின்னர் எதற்காக மகாராஷ்டிராவில் ஒன்றாம் வகுப்பில் இருந்து இந்தி படிக்க வேண்டும்.

மும்மொழிக் கொள்கையை அரசு அலுவல்களோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், இதை கல்வித்துறையில் செயல்படுத்தக்கூடாது. இந்த தேசத்தில் மாநிலங்கள் மொழியால் உருவாக்கப்பட்டுள்ளன, இது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. வேறு ஒருமாநில மொழியை மகாராஷ்டிராவில் திடீரென ஏன் திணிக்கிறீரக்ள். இது மாநில கட்டமைப்புக்கு எதிரானது, மொழியிலுக்கு எதிரானது.
ஒவ்வொரு மொழியும் அழகானது, நீண்ட வரலாறு கொண்டது, மொழிக்கு பின்னால் பாரம்பரியம் இருக்கிறது, அந்த மொழியை மதிக்க வேண்டும். மராத்தி மொழியை மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் மதிக்கவேண்டும். இதுபோல மற்ற மாநிலத்தில் இருக்கும் மொழியை அந்த மாநிலத்தில் உள்ள மக்களும் மதிக்க வேண்டும்.

மராட்டியச் சேர்ந்த ஒருவர் வேறு மாநிலத்தில் வசித்தால், அந்த மாநிலத்தின் மொழியை ஏற்று பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் பாரம்பரிய மொழியியலை பலவீனப்படுத்தினால், இதை எங்களால் ஏற்க முடியாது.
மகாராஷ்டிராவில் இந்தி மொழியைத் திணித்தால், போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிடும். மாநில அரசு திட்டமிட்டே போராட்டத்தை, முரண்பாட்டை தூண்டுகிறது தெளிவாகிறது. மராத்தி மற்றும் மராத்தி அல்லாதோர்களுக்கு இடையிலான வேறுபாட்டை தூண்டி தேர்தல் ஆதாயம் பார்க்கிறது மத்திய அரசு. மராட்டியத்தில் வாழும் மராத்தி மொழி பேசாத மக்கள், அரசின் நடவடிக்கையை புரிந்து கொள்ள வேண்டும். எந்த மொழி மீதும் சிறப்பு அன்பு, கவனிப்பு அரசுக்கு இல்லை.

மாநிலத்தின் பொருளாதாரம் பரிதாபத்துக்குரிய வகையில் இருக்கிறது, பல திட்டங்களுக்கு அரசிடம் பணம் இல்லை. இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பாக கடன் தள்ளுபடியை அறிவிப்பதாக அரசு வாக்கறுதியளித்துள்ளது, ஆனால் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள் இதனால் சோர்வடைந்துள்ளனர். தொழிற்சாலைகள் மஹாராஷ்டிராவை விட்டு வெளியேறுகின்றன. இதை மாநில அரசு வெளிப்படையாக சொல்வதில்லை, மாறாக, பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையை மாநிலத்தில் கொண்டு வருகிறது.
இவ்வாறு ராஜ்தாக்ரே தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘இந்தி இந்துக்களுக்கானது, உருது முஸ்லிம்களுக்கானது என்பது ஒற்றுமைக்கு கேடு’.. உச்சநீதிமன்றம் வேதனை..!