சண்டிகர் மாநிலம், ஜலந்தரை தளமாகக் கொண்ட பஜிந்தர் சிங் 'மகிமை மற்றும் ஞானத்தின் தேவாலயத்தை' வழிநடத்தி வருகிறார். தன்னை 'தீர்க்கதரிசி பஜிந்தர்' என்று அழைத்துக் கொள்கிறார். ஏற்கெனவே பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.
பஞ்சாப் காவல்துறை, மதபோதகர் பஜிந்தர் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கைப் பதிவு செய்து சில வாரங்களுக்குப் பிறகு, அவர் தனது அலுவலகத்தில் ஒரு பெண் மீது தாக்குதல் நடத்தும் ஒரு சிலிர்க்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் அவரது அலுவலகத்திற்குள் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள், இப்போது வைரலாகி வருகின்றன. சிங் தனது அலுவலகத்தில் பொருட்களை வீசுவதையும் பெண் ஒருவரை அறைவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்தப்பெண், மதபோதகர் சிங்கின் ஊழியர் என்று கூறுகின்றனர். முதலில்,மதபோதகர் சிங் மீண்டும் மீண்டும் அந்தப்பெண்ணை அறைகிறார். பின்னர் அவர் ஒரு பெண்ணுடன் வாக்குவாதம் செய்யத் தொடங்குகிறார். சிங் மிகவும் கோபம் அடைந்து காணப்படுகிறார். திடீரென்று, அந்தப்பெண் மீது புத்தகத்தை எடுத்து எறிகிறார்.

இதையும் படிங்க: தாயகம் திரும்ப விரும்பும் ஈழ தமிழர்களுக்கு உதவ தயார்.. உதவிக்கரம் நீட்டிய இலங்கை..!
முன்னதாக, ஒரு பெண் தன்னை இந்த மதபோதகர் சிங் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினார். அந்தப் பெண், 2017 ஆம் ஆண்டு சிங்கின் தேவாலயத்தில் சேர்ந்து 2023 ஆம் ஆண்டு அதை விட்டு வெளியேறியதாகக் கூறினார். 2022 ஆம் ஆண்டு, அவர் தன்னை தகாத முறையில் தொட்டதாகக் கூறி போலீசில் அளித்த புகாரில் தெரிவித்தார்.
"நான் கல்லூரிக்குச் செல்லும்போது அவர்கள் என்னைத் துரத்தி கார்களில் வீடு வரை என்னைப் பின்தொடர்ந்து வருவார்கள். என் தந்தை ஒருபோதும் வீடு திரும்பக்கூடாது என்றும், என் அம்மா தேவாலயத்தை விட்டு உயிருடன் வெளியேறக்கூடாது என்றும் அவர்கள் என்னிடம் மிரட்டுவார்கள். இதனால், நான் மனச்சோர்வடைந்தேன், யாருடனும் அந்த வேதனையைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை" என்று அந்தப் பெண் மொஹாலியில் செய்தியாளர்களிடம் கூறினார். சிங், போதைப்பொருளான அபின் விற்பனையிலும், பெண்களைக் கடத்துவதிலும் ஈடுபட்டதாகவும் அந்தப்பெண் குற்றம் சாட்டினார். "அவர்கள் பெண்களுடன் தவறான செயல்களைச் செய்கிறார்கள். யார் பேசினாலும் அவர்கள் கொல்லப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள்," என்று அப்பெண் குற்றம் சாட்டி இருந்தார்.

பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக உதவி காவல் ஆணையர் பபன்தீப் சிங் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணையம் சிங்கை கைது செய்யக் கோரியுள்ளது.
ஆனால், சிங் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். "நான் சிறு குழந்தைகளின் தந்தை. நான் ஒருபோதும் இதுபோன்ற தவறான செயலைச் செய்தது இல்லை. எனக்கு அநீதி இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்'' என்றும் கூறினார்.
தவறான காரணங்களுக்காக சிங் குறிவைக்கப்படுவது இது முதன்முறையல்ல.2018 ஆம் ஆண்டில், பஞ்சாபின் ஜிராக்பூரைச் சேர்ந்த ஒரு பெண், சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். 2022 ஆம் ஆண்டில், டெல்லியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சிங் தங்கள் மகளின் நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக உறுதியளித்து, அவர்களிடம் இருந்து பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டினர். அவர்களின் மகள் பின்னர் இறந்தார். 2023 ஆம் ஆண்டு வருமான வரித் துறை குழு அவரது வளாகத்தில் சோதனை நடத்தியது.

ஹரியானாவில் ஒரு ஜாட் குடும்பத்தில் பிறந்த சிங், 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகக் கூறப்படுகிறது. அவர் ஜலந்தர், மொஹாலியில் தேவாலயங்களை நடத்தி வருகிறார். இந்த சிசிடிவி காட்சிகள் மதபோதகர் சிங்குக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மேலும் புதிய புகார் வந்தால் விசாரணையை விரிவுபடுத்துவோம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..! 80 வயது முதியவர் கைது..!