“கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல் செய்யப்பட்டது தொடர்பாக 15,405 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், ''டாஸ்மார்க் கடை சில்லறை விற்பனையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகரித்து விற்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அது ஏதோ இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும்தான் நடைபெறுவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதன் மூலம் அரசுக்கு அவர் பெயரை உருவாக்குவதற்கான முழு முயற்சிகளை சமூக வலைதளங்கள், பத்திரிகைகள், சில தொலைக்காட்சிகள் செய்தியாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

நான் ஒரு புதிய உதாரணத்தை பதிவு செய்கிறேன். 2016- 2021 கடந்த அதிமுக ஆட்சியில் கூடுதலாக பத்து ரூபாய் வைத்து விற்பனை செய்து பத்து ரூபாய்க்கு மேலும் வைத்து விற்பனை செய்த வழக்கில் 15,405 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்போது நடந்ததெல்லாம் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் பேசப்படவில்லை.இந்த நான்கு ஆண்டுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சில பணியாளர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். சில பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இதையும் படிங்க: குடிச்சுத் தூக்கு... படு ஜோர் விற்பனை... டாஸ்மாக் வருமானம் ரூ.2488 கோடி உயர்வு..!

இது போன்ற நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகின்றன. 2016 2021ல் அதிமுக ஆட்சியில் 11 கோடியே 86 ஆயிரத்து 690 ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த நான்கு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சீரிய நடவடிக்கையின் காரணமாக 6 கோடியே 79 லட்சத்து 86 ஆயிரத்து 447 ரூபாய் அவர்களிடம் இருந்து அபராதம் பெறப்பட்டுள்ளது. சில பேர் பணியிட மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். சில பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நண்பர்கள், சமூக ஊடக வாசிகள் இது போன்ற தவறான செய்திகளை அரசின் மீது வைத்து வருகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஒருபோதும் எடுபடாது. குறிப்பாக தமிழ்நாடு வாணிபக் கழகத்தை பொறுத்தவரை வெளிப்படுத்தன்மையுடன் எந்த பணிகளாக இருந்தாலும் சரி திறந்த மனப்பான்மையோடு, வெளிப்படை தன்மையோடு ஆன்லைனில் பதிவு செய்து வருகிறோம்.
இதையும் படிங்க: ரூ.1000 கோடிக்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை.. ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்..!