கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள அக்கட்சி தலைவரும் நடிகருமான விஜய் கோவை வந்தார். விமான நிலையத்தில் திரண்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து விடுதியில் ஓய்வெடுத்த விஜய், பிறகு தனியார் கல்லூரியில் ஓட்டுச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடந்த இடத்திற்கு பேரணியாக சென்றார். அவரது காரை ஏராளமானோர் பின்தொடர்ந்து சென்றனர்.

முதல் நாளான இன்று மேற்கு மண்டலங்களை சார்ந்த மாவட்டங்களான ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இன்று 10 மாவட்டங்களுக்கான கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பூத் கமிட்டி கருத்தரத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய விஜய், இதுக்கு முன்னாடி நிறைய பேர் வந்திருக்கலாம் போயிருக்கலாம். நிறைய பொய்களை சொல்லி இருக்கலாம். மக்களை ஏமாத்தி இருக்கலாம். இதெல்லாம் பண்ணி ஆட்சியை பிடிச்சிருக்கலாம். அதெல்லாம் பழைய கதை. அதுக்கெல்லாம் நான் இங்க வரல இனிமே அதெல்லாம் நடக்காது. நடக்க விட போறதும் கிடையாது. நம்ம கட்சி மேல மக்கள் கிட்ட ஒரு பெரிய நம்பிக்கையை கொண்டு வர போறது தேர்தல் களப்பணியில பூத் லெவல் ஏஜென்ஸ் ஆன நீங்கதான் நீங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போர் வீரனுக்கும் சமம் எனக்கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஏன் வந்திருக்கோம், எதுக்கு வந்திருக்கோம் எப்படிப்பட்ட ஒரு ஆட்சியை அமைக்க போறோம் என்பதை மக்கள் கிட்ட கொண்டு போய் எடுத்து சொல்லுங்க. அப்போ உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்குன்னு கேட்பாங்க. ஆனா நீங்க யாரு, நீங்க எப்படிப்பட்டவங்க, உங்களுடைய தகுதி என்னன்னு எனக்கு தெரியும். நம்மகிட்ட என்ன இல்ல, மனசுல நேர்மை இருக்கு, கறைபடாத அரசியல் செய்யணும்னு நம்பிக்கை இருக்கு, லட்சியம் இருக்கு, உழைக்கறதுக்கு தெம்பு இருக்கு, பேசுறதுக்கு உண்மை இருக்கு, செயல்படுறதுக்கு திறமை இருக்கு, அர்ப்பணிப்பு குணம் இருக்கு, களம் ரெடியா இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும் போய் கலக்குங்க.. கான்பிடெண்டா இருங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம் என பேசினார்.
இதையும் படிங்க: 'What Bro...Its Very Wrong Bro..' - கோவை விமான நிலையத்தை டேமேஜ் செய்த விஜய் ரசிகர்கள்!
இதையும் படிங்க: இன்னும் என்னவெல்லாம் செய்ய போறானுங்களோ.. விஜய் பயணம் குறித்து விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!!