அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று பரஸ்வர வரிவிதிப்பு மசோதாவில் கையொப்பமிட்டுள்ள நிலையில் அது உலக வர்த்தகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ள வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பரஸ்வர வரி என்றால் என்ன: அதிபர் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ள பரஸ்வர வரிவிதிப்பு மசோதா என்பது, அமெரிக்கா எந்தெந்த நாடுகளுடன் வர்த்தக உறவு வைத்துள்ளதோ அந்த நாடுகளும், அமெரிக்காவும் தங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஒரே மாதிரியான வரிவிதிப்பை கையாள வேண்டும் என்பதாகும். இதன் மூலம் அமெரிக்கப் பொருட்கள் இறக்குமதிக்கு அதிக வரிவிதிப்பு விதிக்கும் நாடுகள், இனிமேல் விதிக்க முடியாது. இந்தியாவுடன் வர்த்தகப் பற்றாக்குறை வைத்திருக்கும் அமெரிக்கா, இந்த வரிமுறையைப் பின்பற்றினால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: குழந்தை குட்டிகளோடு மோடியை பார்த்த எலான் மஸ்க்..! விரைவில் இந்தியாவில் டெஸ்லா

உதாரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்க ஏற்றுமதி பொருட்களுக்கு சராசரியாக 9.5 % வரி விதிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கு 3 சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது, இதனால் வர்த்தக நிலைத்தன்மையற்ற சூழல் ஏற்படுகிறது. இந்தியாவின் நீண்டகால வர்த்தகக் கூட்டாளியான அமெரிக்கா. 2024நடப்பு நிதிஆண்டில் முதல் 7 மாதங்களில் மட்டும் அமெரிக்காவுக்கு இந்தியா சார்பில் 7200 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பெரும்பாலும் மருந்துப் பொருட்கள், ஜவுளி, விலை உயர்ந்த கற்கள், நகைகள் ஏற்றுமதியாகின்றன. ஆனால், அதிபர் ட்ரம்பின் புதிய வரிமுறை வர்த்தக உறவுக்கு அச்சுறுத்தலாக அமையும், இந்தியப் பொருளாதாரத்திலும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
ஏற்றுமதி துறை பாதிப்பு: இந்தியாவில் உள்ள ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களான ஜவுளித்துறை, ஆயத்த ஆடையகம், வேளாண் பொருட்கள் ஆகியவை இந்த வரிவிதிப்பு முறையால் உடனடியாக பாதிக்கும். இந்த துறைகள் பெரும்பாலும் அமெரிக்க சந்தையை நம்பி இருக்கின்றந, உயர்வரிவிதிப்பு ஏற்பட்டால், போட்டித்தன்மையை இழந்துவிடும்.

நுகர்வோர் பாதிப்பு: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கப்பட்டால், இந்திய நுகர்வோர்கள் விலை உயர்வால் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக மின்னணு சாதனங்கள், ஆட்டோமொபைல்ஸ், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும். இந்தியக் குடும்பங்களின் பட்ஜெட் அதிகரித்து, நுகர்வை பாதிக்கும்.

வர்த்தகப் பற்றாக்குறை கவலைகள்: இந்தியுடன் இருக்கும் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க அமெரிக்காவில் இருந்து எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த முயற்சியை பரஸ்பர நிதி மசோதா பாதிக்கும். இந்தியாவுக்கும் வேறுவழியில்லாத சூழல் ஏற்படும்.

பாதிப்பை எவ்வாறு குறைப்பது: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பல்வேறு துறைகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பது குறித்து இந்தியா பரிசீலிக்கலாம்.
அமெரிக்கச் சந்தையை அதிகம் சார்ந்திருக்காமல், ஏற்றுமதியை அதிகப்படுத்தும் பல்வேறு நாடுகளை ஆலோசிக்கலாம்.

பரஸ்பர வரிவிதிப்பு மசோதாவால் “மேக் இன் இந்தியா” திட்டம் உத்வேகம் பெறும். இந்த திட்டத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தலாம், இதன் மூலம் உற்பத்தி அதிகரிக்கும். பரஸ்பர வரிக் கொள்கை இருதரப்பு உறவுகளுக்கு அப்பால் நீண்டுள்ளது; இந்தியா, அர்ஜென்டினா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்ற வளர்ந்து வரும் சந்தைகள் மீது அதிக பாதிப்பு ஏற்படும். இதன் வீச்சு அடுத்தகட்டமாக வளர்ந்த பொருளாதார நாடுகளுக்கும் பரவும்
இதையும் படிங்க: சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துக் கொள்கிறோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பிரதமர் மோடி உறுதி