2025ம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்வில் பங்கேற்க பேரவை வந்த அதிமுகவினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம் குறித்தும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். வெள்ளை நிற மாஸ்கில் “டங்ஸ்டன் தடுப்போம்... மேலூர் காப்போம்” என்ற வாசத்தையும், கறுப்பு நிற சட்டையில் “யார் அந்த சார்?” என்ற பேட்ஜை 3வது நாளாக ஒட்டிக்கொண்டும் வந்தனர்.

இதனிடையே, இன்று காலை முதலே அதிமுகவினர் லைவ் அவுட்டில் காட்டப்படவில்லை என்றும், தங்களை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்ய திமுக திட்டமிடுவதாகவும் அதிமுக தரப்பு குற்றம்சாட்டியது. வழக்கமாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினால் கூட அதனை தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதற்கு ஏதுவாக, சட்டமன்றத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பிற்கு அனுமதிக்கப்படும். சட்டமன்றத்திற்குள் சென்று நேரலை செய்ய எந்த ஊடகத்திற்கும் அனுமதி கிடையாது. அதற்கு பதிலாக அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கேமரா குழு பதிவிடும் காட்சிகளை அவர்கள் அனுமதியுடன் மட்டுமே நேரலை செய்ய முடியும்.
இதையும் படிங்க: இதுபோல 100 ‘சார் கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும் என சட்டப்பேரவையில் கர்ஜித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்

ஆனால் இன்று முழுவதுமே அதிமுகவினரை நேரலையில் காட்டவில்லை என்றும், எதிர்வரிசையில் அமர்ந்திருந்த அதிமுகவினர் பக்கமே கேமரா திரும்பவில்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். அதற்கு பதிலாக சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட திமுகவினர் மட்டுமே ஒளிபரப்பில் காட்டப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவின் செயலைக் கண்டித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “கேள்வி எழுப்பும் அதிமுக உறுப்பினரின் முகத்தைக் கூட காட்டாமல் திமுகவினர் பக்கமே காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும் காட்சியை பதிவிட்டுள்ள அவர், இது சரியா... மாண்புமிகு ஓம்பிர்லா அவர்களின் வழியில்” என பதிவிட்டுள்ளார். அதாவது நாடாளுமன்ற நிகழ்வுகளின் போது காங்கிரஸ் மற்றும் திமுகவினரின் நேரலை புறக்கணிக்கப்படுவது போல், திமுக அதிமுகவை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆளுநர் கேஷுவல் லேபர் மட்டுமே..திமுக ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!