மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பது குறித்து தேர்தலில் ஈடுபட்ட தேர்தல் பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள், பூத் அதிகாரிகள் புள்ளிவிவரங்களை அனுப்பி வருகிறார்கள். அதை சரிசெய்து ஒழுங்குபடுத்தும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் 2024 மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் சராசரியாக செலவு செய்த தொகை, அதிகபட்சம், குறைந்தபட்ச செலவு விவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு.

திருத்தப்பட்ட தேர்தல் விதிகளின்படி வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகை 2022ம் ஆண்டிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவோர் எண்ணிக்கை, தொகுதிகள், பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஆன்லைன் பிரசாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெரிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு அதாவது ஆந்திரா, தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ளதொகுதிகளுக்கு அதிகபட்சம் ரூ.95 லட்சம், சிறியமாநிலங்களுக்கு ரூ.75 லட்சம் என பிரிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 86,000 பேருக்கு வீட்டு மனை பட்டா..! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

அந்த வகையில் வேட்பாளர்களின் செலவுகளை ஒருங்கிணைக்கும் “அட்லஸ்” மென்பொருளின்படி சுதந்திரத்துக்குப்பின் நடந்த முதல் தேர்தலுக்குப்பின் வேட்பாளர்களின் செலவு 5 மடங்கும், அரசியல் கட்சிகளின் செலவு 15 மடங்கும் அதிகரித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில்8360 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், இதில் 7190 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் .

திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் அதிபட்சமாக ரூ.94.89 லட்சம் செலவிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வயநாடு பிரச்சாரத்துக்காக ரூ.92.82 லட்சம், கர்நாடக எம்.பி.க்கள் சுனில் போஸ், பிஒய் ராகவேந்திரா, இ.துக்காராம் உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் அதிகமான செலவு செய்துள்ளனர்.

கோவை திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார் வேட்பாளர்கள் செலவு செய்த தொகையில் 9-வது இடத்தில் ரூ.92.96 லட்சம் செலவு செய்துள்ளார். இமாச்சலப்பிரதேச எம்.பி.க்கள் 4 பேர் சராசரியாக ரூ.85.46 லட்சம் செலவிட்டுள்ளனர். காஷ்மீரு பாரமுல்லா எம்.பி. எஞ்சினர் ரஷித் ரூ.2.10 லட்சம், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ரூ.20.67 லட்சம் பிரசாரத்துக்காக செலவிட்டுள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதிமா மொண்டல் குறைந்தபட்சமாக ரூ.12500 மட்டுமே செலவிட்டுள்ளார் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்...