மத்தியப்பிரதேச மாநிலம், ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள பொலாய் கலான்நகர், டாப்ரிபுரா என்ற பகுதியை சேர்ந்தவன் ரமேஷ் சிங். 2003ம் ஆண்டு, அடிக்கடி பக்கத்தில் உள்ள ஷாஜாபூருக்கு சென்று வந்த ரமேஷ் சிங், அங்கு யாரும் பார்க்காத போது 5 வயது சிறுமியை கடத்தினான். மறைவான இடத்தில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினான். சிறுமி வலியால் கதறி அழுதுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த கிராம மக்கள் ரமேஷ் சிங்கை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ரமேஷ் சிங்கின் இந்த குற்றம் கோர்ட்டில் நிரூபணமாகி, ரமேஷ் சிங்குக்கு 10 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் முழுமையாக சிறையில் கழித்த ரமேஷ் சிங், 2013ல் விடுதலையாகி வெளியே வந்தான். அதன்பிறகும் அவன் திருந்தவில்லை. அண்டை மாவட்டமான செஹோரில் (sehore) குடியேறினான். அங்கும் அவனது கண் சிறுமிகளின் மேலே இருந்தது. அடுத்த ஆண்டே தனது சேட்டையை மீண்டும் துவங்கினான். அங்கு கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை பார்த்தான். உடனே அந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினான்.
இதையும் படிங்க: கும்பமேளா சென்றவர்கள் 4 பேர் பலி.. பல முறை பல்டி அடித்த ஜீப் ..

இந்த முறையும் சிறுமியின் அலறலால் மாட்டிக்கொண்டான் ரமேஷ் சிங். 2வது முறை சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ரமேஷ் சிங் ஈடுபட்டதை கருத்தில் கொண்ட கோர்ட்,
ரமேஷ் சிங்குக்கு தூக்கு தண்டனை விதித்தது. தனக்கென தனி வக்கீல் வைத்து வாதாடி, இந்தூர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தான். ரமேஷ் சிங்கின் வழக்கறிஞர் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து நுணுக்கமாக வாதிட்டார். ரமேஷ் சிங்கை சிறுமி அடையாளம் காட்டியபோது, அவளது தந்தையும் உடனிருந்துள்ளார். இதைச்சுட்டிக்காட்டி, ரமேஷ் சிங்கின் வழக்கறிஞர் வாதிட்டார்.
ரமேஷ் சிங்கை காட்டும்படி சிறுமிக்கு அப்பா சொல்லிக் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளப்பினார். அந்த வாதத்தை ஐகோர்ட் ஏற்றுக் கொண்டு ரமேஷ் சிங்கின் தூக்கு தண்டனையை ரத்து செய்தது. 6 ஆண்டுகளில் 2019ல் மீண்டும் விடுதலையாகி வெளியே வந்தான் ரமேஷ் சிங். இந்நிலையில், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள (Narsinghgarh) நரசிங்கர் கிராமத்தில் காதுகேளாத வாய் பேச முடியாத 11 வயது சிறுமி கடந்த 1ம்தேதி இரவில் மாயமானாள். மறுநாள் அந்தச் சிறுமி அதே பகுதியிலுள்ள புதரில் பலத்த காயங்களுடன் கிடந்தாள். அவள்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.

அந்த சிறுமி மிக மோசமான நிலையில் போபாலில் உள்ள ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டாள். ஒரு வாரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி உயிரிழந்தாள். இந்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சம்பவம் நடந்த கிராமத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் அதிகமான சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆராய்ந்தனர். குற்றம் நடந்த இடத்தின் அருகே காமுகன் சுற்றித் திரிவதை கண்டனர். விசாரணையில் அவன் ரமேஷ் சிங் என்பது உறுதியானது. தூக்கு தண்டனையில் இருந்து தப்பியவன் மீண்டும் வேலையை காட்டியிருக்கிறான் என போலீசார் புரிந்துகொண்டனர்.
சிசிடிவியில் அப்பகுதியில் தென்பட்ட ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தபோது சம்பவத்தன்று ரமேஷ் சிங்கை தான்தான் ஆட்டோவில் நரசிங்கர் கிராமத்தில்இறக்கி விட்டதாக கூறினார். அதைத் தொடர்ந்து, அவனைப்பிடிக்க 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கிட்டத்தட்ட 100 போலீசார் அவனை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.அவன் ஃபோனை டிராக் செய்தபோது, மகா கும்பமேளாவில் பங்கேற்க பிரயாக்ராஜ் சென்றது தெரிய வந்தது. உடனே பிரயாக்ராஜுக்கு விரைந்த தனிப்படையினர் அங்கு முழுவதும் அவனை தேடினர். அதற்குள் ராஜேஷ்சிங் திரிவேணி சங்கமத்தில் குளித்து விட்டு ஜெய்ப்பூருக்கு ரயில் ஏறியிருந்தான். உடனடியாக அடுத்த ஸ்டேஷனில் இருந்த போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ரயிலில் வைத்தே அவனை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை வன்கொடுமை செய்த பிறகு, கொடூரமாக தாக்கியதைஒப்புக் கொண்டான். 2019ல் தூக்கில் இருந்து தப்பிய பிறகு இடைப்பட்ட 6 ஆண்டுகளில் வேறு பாலியல் சம்பவங்களில் அவன் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் தீர்வு காணப்படாத பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இவனுக்கு தொடர்பு உள்ளதா? என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராஜ்கர் எஸ்பி ஆதித்ய மிஸ்ரா தெரிவித்தார்.
இதையும் படிங்க: பஞ்சாயத்து தலைவர் பதவி FOR SALE..! அக்ரீமெண்ட் போட்டு விற்ற தில்லாலங்கடி பெண் தலைவி