நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. லாபுசே நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில் காலை 6.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடுபாடிகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 67 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிராக வெகுண்டெழுந்த திமுக... காலையிலேயே மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தியாவிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது. டெல்லி, பீகார், மேற்கு வங்கத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டது. நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவிகளில் கட்டிடங்கள், வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் குலுங்கும் வீடியோ காட்சிகள் பதிவாகி இணையத்தில் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதால் படு பாதாளத்துக்குப் போன செல்வாக்கு...!! ஜஸ்டின் ட்ருடோ பதவி விலகியதின் பின்னணி....