சமீபத்தில் புதுவையில் நடந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவராக தனது மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை நியமிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார் இதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது ராமதாஸ், இது என் கட்சி, என் முடிவை ஏற்போர் இருக்கலாம். முடியாதவர்கள் வெளியேறலாம் என தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பா - மகனுக்கு இடையே உள்ள மோதல்கள் குறித்து பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டத்தை நடத்தினர்.

அப்போது, கட்சியின் வளர்ச்சி, சட்டமன்றத் தேர்தல், அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்ளுக்கு பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ், உட்கட்சிப் பிரச்சினையில் அடுத்தவர்கள் தலையிட வேண்டாம். எங்களுக்கு ஐயா, ஐயாதான்...’’ எனத் தெரிவித்து இருந்தார்
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ‘‘அன்புமணி-ராமதாஸ் போன்ற குடும்ப அரசியல் சண்டைகள் அவ்வப்போதைய பரபரப்புகளே. பெரும் மாற்றத்தை நிகழ்த்தாது. ஒரு அதிகாலையில் கலைஞர் தம் மகன் மு.க.அழகிரி தம்மை மிரட்டுவதாக பொதுவெளியில் கூறினார். (அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவியும் வாங்கி தந்திருந்தார்)
இதையும் படிங்க: உண்மையான சாமி அப்பனும், ஆத்தாளுந்தான்...’ உருகிய ராமதாஸ்... தைலாபுரத்தில் குவிந்த பாமக நிர்வாகிகள்..!
அதே அழகிரியை, முரசொலி மாறன் குடும்பம் சன் டிவியில் அவமானப்படுத்தியதாக கலைஞர் கோபப்பட்டார். மதுரை தினகரன் அலுவலகம் எரிந்தது. பஞ்சாயத்து நடந்தது. கண்கள் பனித்தன.இதயம் இனித்தது என இணைந்தார்.
வாரிசு அரசியல் கூடாது என மதிமுகவை 30 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் துவக்கினோம். அதன முடிவு இன்று வேடிக்கையாக இருக்கிறது. எங்கள் உழைப்பு வீண் வினைகளை் ஆகிவிட்டது தமிழக அரசியலில் இவை சகஜம்..
தந்தை என்கிற ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே அரசியல், அதிகாரம், பதவி, பணம் என சகலத்தையும் பெற்ற வாரிசுகள், பொதுச்சொத்தான அரசியல் கட்சியை தங்கள் குடும்பத்தின் தனிச்சொத்தாக கருதுவதாலும் அந்த குடும்ப சொத்துக்கு தாம் மட்டுமே அரசியல் கட்சிகளில் வாரிசுகள் என்கிற ஆணவமும் சேர்ந்து இவர்களை ஆட்டுவித்தது... ஆட்டுவிக்கிறது. அரசியல் ஜனநாயகம் இல்லாத நிலை ஆக்கி விட்டனர். நாஞ்சில் மனோகரன் சொன்ன ‘கருவின் குற்றம் ’
இவைகளெல்லாம் ஓரங்க நாடகத்தை நினைவூட்டும்... ஆனால் இதை நம்பி முட்டு கொடுக்கும் தொண்டர்கள் நிலைபரிதாபத்துக்குள்ளாகும். ஆடும்வரை ஆட்டம்... ஆயிரத்தில் நாட்டம்..’’எனத் தெரிவித்துள்ளார்.
அன்புமணி- ராமதாஸ் மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிர்வாகிகள்,‘‘இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி பாமக மட்டுமே! எந்த கட்சியிலேயாவது ஒரு நிறுவனத் தலைவரை கேள்வி கேட்க முடியுமா? நேற்றே பேசி முடிவுக்கு வந்தாச்சு. அப்படி வரவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை. எங்கள் சாதிக்கான ஓட்டு ஒரு ஆறு முதல் ஏழு சதவிகிதம். தனியாக பாமக அல்லது வேல்முருகன் எங்க சாதி ஆட்களுக்குள்தான் சுற்றிக் கொண்டே இருக்கும். வேறு எங்கும் போகாது எங்க ஓட்டு... விசிக தனியாக நின்றால் எத்தனை சதவிகிதம் ஓட்டு வாங்கும்?’’ என கேள்வி எழுப்புகின்றனர்.
அது ஒரு நாடகம்! வாரிசு அரசியலுக்கு வெளியிலிருந்து விமர்சனம் வரும்முன்பு அன்புமணி அதை ஆட்சேபிப்பபதுபோல் நடித்தார். முகுந்தனுக்கு பதவி நிலைக்கும்போது இந்த உண்மை புரியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: பேரனுக்குப் பதவி... அப்பாவுக்கும்- மகனுக்கும் சண்டை... யார் இந்த முகுந்தன்..!