சமீபகாலமாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பெரியார் ஆதரவாளர்களிடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. முதலில் வார்த்தை மோதலாக நீடித்த இந்த பிரச்சனை தற்போது வீட்டை முற்றுகையிடும் அளவிற்கு மாறி உள்ளது. இதனால் கடுப்பான சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து எதிர்க் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியாரை ஈவேரா அல்லது ராமசாமி என்று அழைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சீமான், பெரியார் குறித்த பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஒரு பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான், 'பெரியார் குறித்து தான் பேசியதற்கு இந்தியாவிலேயே ஒரே நாளில் 100 வழக்குகளை வாங்கியவன் தான் இந்த சீமான். ஆனால் உங்களைப் போல கொள்ளையடித்து ஊரான் சொத்தை சேர்த்து பல்லாயிரம் கோடி ரூபாய் சேர்த்தவன் அல்ல நான்' என கூறினார்.
இதையும் படிங்க: ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... இது இந்திய அரசின் பட்ஜெட்டா.? பீகார் அரசின் பட்ஜெட்டா.? காங்கிரஸ் சும்மா கிழி.!
தொடர்ந்து பேசிய அவர், பெரியாரை இழிவுபடுத்தி விட்டதாக என் மீது எத்தனை வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரியார் தான் தமிழினத்தையும், தமிழையும், தமிழ்நாட்டையும் இழிவுபடுத்தி விட்டதாக சீமான் ஆவேசமாக கூறினார். மேலும், 'இதனால் பெரியார் ஆதரவாளர்கள் தான் மண்டியிட்டு தமிழக மக்கள் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும். இதையெல்லாம் கடந்து போய்விடுவேன் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் வரலாற்றிலேயே மிகச்சரியான எதிரியை தற்போது தான் பார்த்திருக்கிறீர்கள், அதனால் இந்த விஷயத்தை எளிதில் விடமாட்டேன் என சீமான் காட்டமாக பேசி உள்ளார்.
தொடர்ந்து சீமான் ஆதரவாளர்கள் பெரியாரை அட்டாக் செய்து பேசி வரும் நிலையில் பெரியார் ஆதரவாளர்களும் தங்களது பங்கிற்கு சீமானை கடுமையாக விமர்சித்து மேடைகள் மற்றும் போராட்டங்கள் வாயிலாக சமூக வலைதளங்களிலும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓல்டு ரிஜிமில் இருக்கலாமா.? நியூ ரிஜிமுக்கு மாறலாமா.? வருமான வரி விதிப்பில் எது பெஸ்ட்..?