தமிழக வெற்றி கழகம் சார்பில் கோவையில் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம் மற்றும் நாமக்கல் என மொத்தம் 7 மாவட்டங்களைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளார்கள். இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து புறப்பட்டு கோவைக்கு வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், விமான நிலையத்தில் இருந்து திறந்த வேனில் ஏறி நின்று, தொண்டர்களின் வரவேற்பை விஜய் ஏற்றுக் கொண்டார். சாலையின் இரு புறங்களிலும் விஜய்யை பார்க்க காத்திருந்த அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து விஜய் சிரித்த முகத்துடன் கையசைத்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென சில ரசிகர்கள் அவரது பிரச்சார வாகனத்தின் மீது ஏறினார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வைரலானது.
இதையும் படிங்க: விஜயால் பாதிக்கப்பட்ட அவிநாசி மக்கள்... காரணம் இதுதான்!!

தொண்டர்கள் இப்படி வாகனத்தின் மீது ஏறுவார்கள் என விஜய் எதிர்பார்க்காததால், முதலில் அவர் திணறிப் போனார். அதன் பின்னர் அவர்களை பத்திரமாக இறங்கச் சொன்னார். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அதனால்தான் பிரச்சார வாகனத்தின் மீது அவரது ரசிகர்கள் ஏறி உள்ளார்கள் என விமர்சித்து வருகிறார்கள்.

இது மட்டும் இல்லாமல், ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யின் பிரச்சார வாகனத்தின் மீது ஏறிய ரசிகர்களைப் பார்த்து மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார். அதாவது, கோவையில் விஜய்யின் வாகனத்தில் ஏறி கொரளி வித்தை காட்டிய ரசிகர்கள். உங்களுக்கு பயந்துதான்டா Y பாதுகாப்பு கேட்ருக்காரு. இன்னும் என்னவெல்லாம் செய்ய போறானுங்களோ என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் கால் பதித்த விஜய்.. இந்த 2 தொகுதிகளுக்கு குறி.. திராவிட கட்சிகளுக்கு ஸ்கெட்ச்..!