ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் நீட்சியாக பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மடிப்பாத்து தலங்கள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் திருப்பதி திருமலையில் கூட வாகன தணிக்கை நடத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்ட மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனிடையே சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் அசாதாரண சூழல்.. புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

இமெயில் மூலமாக மிரட்டல் வந்ததை தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத தாக்குதல் எதிரொளியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதா, மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வெடிகுண்டு மிரட்டலை எடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு..! அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி..!