கடல் வாழ்வினங்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், கடல் பகுதி வாரியாக ஆழ்கடலில் மீன் பிடிக்க ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்கள் மத்திய அரசு தடை விதித்து வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மீன் பிடி தடைக்காலத்தையும் மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

அந்த வகையில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் இந்த ஆண்டுக்கான மீன் பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் துவங்குவதாகவும், தடைக்காலமானது வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி வரையில் அதாவது 61 நாட்கள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ராமதாஸ் மரியாதை..! பாமக தொண்டர்கள் முழக்கம்..!

இந்த தடையானது கட்டு மரங்கள் மற்றும் பைபர் படகுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படாததால் சிறு கட்டுமரம் மீனவர்கள் மட்டும் மீன் பிடித்து விற்பனையில் ஈடுபடுவர். அதனைத் தொடர்ந்து மீன்பிடி தடை காரணமாக திருவள்ளூரில் இருந்து கன்னியாகுமரி வரையில் உள்ள கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் மாநில முழுவதும் சுமார் 20,000 மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்படும். இதனால் மீன்களின் வரத்து குறைந்து விலை சரிவர உயரக்கூடும் என அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அம்பேத்கர் ஜெயந்தி- 2025: பாபா சாகேப் இஸ்லாம் மதத்தை ஏற்காததன் காரணம் தெரியுமா..?