சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது; செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாறும். 2021 ஆம் ஆண்டு வரை 21 சிப்காட் மட்டுமே இருந்த தமிழ்நாட்டில் தற்போது 34 மாவட்டங்களில் சிப்காட் உருவாக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் ஆயிரம் கோடி முதலீடு செய்வதை உறுதிப்படுத்தி உள்ளது. சாம்சங் நிறுவனத்துடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. தமிழ்நாட்டில் செவி கண்டக்டர் தலைநகரமாக முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் மாற்றுவார். தொழிலாளர்கள் மீது நம்பிக்கை உள்ளதாக சாம்சங் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்கள் செம்ம குஷி.. சம்பள உயர்வு அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்..!

0.96% மட்டுமே நன்செய் நிலங்களை தாங்கள் நாங்கள் சிப்காட்டிற்காக எடுத்துள்ளோம். தமிழகத்தில் தான் அதிக திறன் கொண்ட மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்கிறோம். இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசினார்.
இதையும் படிங்க: நானே இப்படி பண்ணிட்டேனே..! மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த துரைமுருகன்..!