கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்தார். கல்லீரல் அழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வாடிகனில் திரண்டுள்ள மதகுருக்கள், பொதுமக்கள் என அனைவரும் போப் ஆண்டவருக்கு இறுதி விடை கொடுக்க தயாராகி வருகின்றனர்.

போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தனது மனைவியோடு பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக திரவுபதி முர்மு இன்று வாடிகன் செல்ல உள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு பதிலடி..! ஜனாதிபதியுடன் அமித்ஷா அவசர சந்திப்பு..!

இதையும் படிங்க: ARTICLE 142 ஒரு அணு ஆயுதம்..! உச்சநீதிமன்றம் குறித்து துணை ஜனாதிபதி கடும் விமர்சனம்..!