தமிழக வெற்றி கழகத்தினுடைய வருகின்ற 26 மற்றும் 27 தேதிகளில் தமிழக வெற்றி கழகத்தினுடைய வாக்குச்சாவடி முகவர்களுக்கான அந்த கருத்தரங்கமானது கோயம்புத்தூர் மாவட்டம் குடும்பப்பாளையத்தில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரியில் நடைபெறும் என தமிழக வெற்றி கழகத்திலிருந்து தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அந்த அறிக்கையில், அதன்படி தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பேரின்பையும் பேராதரவையும் பெற்ற வெற்றி தலைவர் அவர்களுடைய வழியில் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய நாள் முதலே நமக்கான வெற்றி பாதை விரிவடைந்து கொண்டே வருகிறது. நம் செல்வாக்கு வளர்ந்து கொண்டே வருகிறது.இதை நமது கொடி அறிமுக விழா, வெற்றி கொள்கை திருவிழா, இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் இதர மக்கள் பணி வாயிலாக தொடர்ந்து கண்டு வருகின்றோம்.

தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தினுடைய வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் வருகின்ற 26 மற்றும் 27 தேதிகளில் தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்பத்தூர் குடும்பாளையம் இருக்கக்கூடிய தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. அந்த வகையில்இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாளில் 10 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாகவடி முகவர்களும், அதேபோன்று இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..! அண்ணல் அம்பேத்கருக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் மரியாதை..!
முதற்கட்டமாக ஐந்து மண்டலங்களாக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கமும், மாநாடும் நடைபெறும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருக்கக்கூடிய ஒரு நிலையில் முதற்கட்டமாக மேற்கு மண்டலங்களை சார்ந்த மாவட்டங்களான ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடைபெறும். முதல் நாளில் 10 மாவட்டங்களும், அதேபோன்று இரண்டாம் நாளில் 14 மாவட்டங்களுக்கும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த கருத்தரங்கில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருடைய தலைவரான விஜய் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும் 2026 ஆம் ஆண்டிற்கான அந்த சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்க உரை ஆற்ற இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும் வாக்குச்சாவடி முகவர்களும் தான் எனவே தமிழக வெற்றி கழகத்தின் வாக்குச்சாவடி தொடர்பான பணிகளுக்கு முதுகெலும் பாகத்தை திகழும் வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும் நம் வெற்றி தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற உள்ள தமிழக வெற்றி வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் கரங்களுக்கு வழுசேர்ப்போம், வாகை சூடுவோம் என இந்த அறிக்கையிலே குறிப்பிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய், உரையாற்றிய வீடியோ பதிவு ஒளிபரப்பபட்டுள்ளது. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கூட விஜய் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நேரில் பங்கேற்க திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: தவெக முதல் பொதுக்குழு கூட்டம்.. மேடையில் அமர்ந்த 8 பேர் யார்..? யார்..?