கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களின் இரண்டாவது நாள் கருத்தரங்கம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. நேற்று தொடங்கிய பூத் கமிட்டி மாநாட்டில் ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், சேலம் வடமேற்கு, சேலம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த 7,500 நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பல்வேறு ஆலோசனைகளை விஜய் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், நம்முடைய ஆட்சி மலரும் போது ஊழலும் இருக்காது, ஊழல்வாதிகளும் இருக்க மாட்டார்கள் என்ற திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2வது நாள் பூத் கமிட்டி கருத்தரங்கம்..! த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்பு..!

எனவே, எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் பூத் கமிட்டி நிர்வாகிகள் மக்களை அணுகுங்கள் என்று கூறிய அவர், மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள், மக்களுக்காக வாழ் என்று அறிஞர் அண்ணா கூறியதாக தெரிவித்தார். இது ஓட்டுக்காக நடக்கும் கூட்டம் கிடையாது என்றும் தமிழக வெற்றிக்கழகம் அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி கிடையாது என்றும் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை எனவும் கூறினார்.
அதேசமயம் இதனால் ஒரு நல்லது நடக்கிறது என்றால் எந்த ஒரு விதமான எல்லைக்கும் சில தயங்க மாட்டேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொண்டர்கள் செய்த தரமான சம்பவம்.. தவெக நிர்வாகிகள் மீது வழக்கு..!