கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் வரும் திங்கள்கிழமை (20-ந் தேதி) அவர் பதவியேற்க உள்ளார்.

அதற்கு முன்பாக ஜோ பைடன் பதவி விலகுகிறார். ஏற்கனவே ஜோ பைடன் தனது அதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
இதையும் படிங்க: “கனடாவை அமெரிக்காவுடன் இணைச்சிருங்க”: ஜஸ்டின் பதவி விலகியவுடன் சேட்டையைத் தொடங்கிய டிரம்ப்..
குற்ற வழக்கில் சிக்கிய தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கியது, ரஷியா மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்டவை அதில் அடங்கும்.

இந்நிலையில் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் ஜோ பைடன் நேற்று ஒரே நாளில் மட்டும் 2500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி இருக்கிறார்.
வன்முறையற்ற சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோ பைடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் இத்தனை பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

மரண தண்டனை குறைப்பு வன்முறையில் ஈடுபடாதபோதிலும் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பைடன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் 37 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த மாதம் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதால் படு பாதாளத்துக்குப் போன செல்வாக்கு...!! ஜஸ்டின் ட்ருடோ பதவி விலகியதின் பின்னணி....