நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. முதல் பிரிவு ஜனவரி 31ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 13ம் தேதிவரையிலும், 2வது பிரிவு கூட்டம், மார்ச் 10ம் தேதி தொடங்கி, ஏப்ரல்4ம் தேதிவரை நடக்கிறது

குடியரசுத் தலைவர் தெளரபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. அன்றைய நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் பிப்ரவரி 1ம் தேதி பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்பகுதி 9 அமர்வுகளாக நடத்தப்படுகிறது, குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தும், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் விவாதங்களுக்கு பதில் அளிப்பார். அதன்பின் 2வது அமர்வில், பல்வேறு மானியக் கோரிக்கைகள், மசோதாக்கள் மீதான விவாதங்கள் நடக்கும்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து, டெல்லியை மையப்படுத்தி எந்தவிதமான அறிவிப்பும் மத்திய அரசு வெளியிடக்கூடாது எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 8ம் தேதியும் நடக்கிறது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு விசுவாசமான எதிர்க்கட்சித் தலைவர் தேவை... ராகுல் காந்தியை பொளக்கும் பாஜக!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுவதால், அந்த மாநிலத்துக்கான சிறப்புத் திட்டங்கள் இருக்கும் என பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சியும் எதிர்பார்த்துள்ளன. வக்பு சட்டத்திருத்த மசோதா 2024 குறித்த அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக்குழு பட்ஜெட் கூட்டத்தொடரில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், லோக் ஜன சக்தி கட்சிகள் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய அழுத்தம் கொடுக்கமாட்டார்கள் எனத்தெரிகிறது. கூட்டுக்குழு அறிக்கையை இறுதி செய்துவிட்டால், பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பது எதிர்பார்ப்புக்குரியதாகும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த மசோதா குறித்த சட்டத்திருத்த மசோதா குறித்த அறிக்கையையும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்தான் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஸ்வரஸ்யத்தை முடிவு செய்யும். இந்திய கூட்டணியிலிருந்து தனித்து செயல்பட்டு காங்கிரஸ் செயல்படுகிறது, ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தியா கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி-யால் யாருக்கு ஆதாயம்? ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்பை காலி செய்யும் வரி..