சென்னை கொளத்தூர் ஹரிதாஸ் இரண்டாவது தெரு பகுதியில் வசித்து வருபவர் யோகேஸ்வரன். வயது 51. இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. அவருக்கு வயது 45. சரஸ்வதிக்கு பாலு என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி அவர் இறந்துவிட்டார். பாலு - சரஸ்வதி தம்பதிக்கு தினேஷ் என்கின்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் சரஸ்வதி இரண்டாவதாக யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கொளத்துரில் வசித்து வருகிறார். அவரது மகனான கரண் என்கின்ற தினேஷ், திருமணத்திற்கு பிறகு அரும்பாக்கம் என்.எஸ்.கே நகர் பகுதியில் தனது மனைவி ரஞ்சிதாவுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் குடும்பத் தேவைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷ் தனது தாயார் சரஸ்வதியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால் சரஸ்வதி தற்போது பணம் இல்லை என்றும் பிறகு பணம் கிடைக்கும் போது தருவதாகவும் கூறி உள்ளார். அதனால் ஆத்திரமடைந்த தினேஷ் நேற்று இரவு 10 மணியளவில் கொளத்தூர் வந்து தாயின் வீட்டில் பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது.
முடிவில் பீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் கலந்த பெட்ரோலை ஊற்றி அந்த பீர் பாட்டிலை தூக்கி சரஸ்வதியின் வீட்டு வாசலில் அடித்துள்ளார். பீர் பாட்டில் கதவின் மீது பட்டு உடைந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் கார் கண்ணாடிகளையும் தினேஷ் அடித்து உடைத்துள்ளார்.
இதையும் படிங்க: இரவு முழுவதும் குடித்த கல்லூரி மாணவி... அதிகாலையில் நடந்த சோகம்!!

பீர் பாட்டிலால் தீப்பற்றி எரியத்துவஙக் உடனடியாக வீட்டில் இருந்தார்கள் ஓடி வந்து தீயை அனைத்துள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொளத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி நேற்று இரவு அரும்பாக்கம் என்.எஸ்.கே நகர் பகுதியை சேர்ந்த கரண் என்கின்ற தினேஷை கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட தினேஷ் மீது வழக்கு பதிவு செய்த கொளத்தூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: எங்க அம்மாவையா திட்டுற.. ஆத்திரத்தில் அப்பாவையே அடித்துக் கொன்ற இளைஞன்..சிக்கியது எப்படி?