இந்தியாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது, வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாட்டுக்கு ஏன் 2.10 கோடி டாலர்களை அமெரிக்கா வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்க வழங்கப்படும் 2.10 கோடி டாலர்கள் நிதியுதவியையும் அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார். அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை தேவையின்றி வீணடிக்கமாட்டேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியாவில், வரி விதிப்பு வீதமும் அதிகம். அப்படியுள்ள நாட்டுக்கு ஏன் நிதியுதவி, ஆதரவு வழங்க வேண்டும். அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க கூடாது. ஆதலால், இந்தியாவில் வாக்காளர்கள் வாக்களிக்க ஊக்குவிக்க, அமெரிக்க அரசு வழங்கிவந்த 2.10 கோடி டாலர்கள் நிதியுதவியை உடனடியாக ரத்து செய்கிறோம். இனிமேல் இந்த நிதியுதவி இந்தியாவுக்கு வழங்கப்படாது.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு மசோதா: இந்தியா சந்திக்கும் சவால்கள் என்ன?

எனக்கு இந்தியா மீதும் அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மீதும் மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால், அந்த நாட்டுக்கு 2.10 கோடி டாலர்கள் நிதியுதவி வழங்க வேண்டுமா” எனத் தெரிவித்தார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் திறன் ஆய்வு துறை, கடந்த 16ம் தேதிவெளியிட்ட உத்தரவில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவந்த வாக்காளர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் நிதியுதவி 2.10 கோடி டாலர் நிதியுதவியை ரத்து செய்து அறிவித்தது.

இதற்கு பாஜக செய்தித்தொடர்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்க 2.10 கோடி டாலர்கள் பணமா. இது இந்தியாவின் தேர்தல் நடைமுறையில் நிச்சயமாக வெளிநாட்டு சக்திகளின் தலையீடுதான். இதில் லாபம் அடைந்தவர்கள் யார், உறுதியாக ஆளும் பாஜக அல்ல” எனத் தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் அஜெய் மகான் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ இந்தியாவின் ஜனநாயக முறை, தேர்தல் முறையில் எந்த வழியிலும் வெளிநாட்டு தலையீடு தேவையற்றது, சரியில்லாதது அதை காங்கிஸ் எதிர்க்கும். தேவைப்பட்டால் கண்டிப்போம்இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குழந்தை குட்டிகளோடு மோடியை பார்த்த எலான் மஸ்க்..! விரைவில் இந்தியாவில் டெஸ்லா