அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, டொனால்ட் டிரம்ப் அதிரடி காட்டி வருகிறார். ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்கிற புதிய முழக்கத்தை தொடங்கி உள்ளார். இப்போது அமெரிக்காவை ‘ஐக்கிய அமெரிக்கா’என்கிற கொள்கையை முன் மொழிகிறார். அதற்கான முழுமையான திட்டத்தை அவர் தயார் செய்துள்ளார்.
நேற்று, டிரம்ப் தனது ட்ரூத் மீடியாவில் அமெரிக்காவின் புதிய வரைபடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் கனடாவும் அமெரிக்காவின் ஒரு பகுதி’ எனச் சுட்டிக்காட்டியுள்ளார். டிரம்பின் இந்த 'கிரேட்டர் அமெரிக்கா' திட்டம் பெரும் விவாதங்களை கிளப்பி உள்ளது.

இதனால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆக்ரோஷமாகி விட்டார்.
டிரம்ப் கனடாவுடன் இந்தத் திட்டத்தை நிறுத்தப் போவதில்லை. டென்மார்க்கிலிருந்து கிரீன்லாந்தை திரும்பப் பெறுவதே அவரது எண்ணம். இந்த பணிக்காக அவர் தனது மகன் டிரம்ப் ஜூனியரை கிரீன்லாந்துக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம், டிரம்ப் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டையும் எடுக்க விரும்புகிறார். இதை அடைவதற்காக ராணுவத்தையும் அனுப்பும் திட்டமும் அவரிடம் உள்ளது. இவையெல்லாம் நடந்தால் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா மாறும்.
இதையும் படிங்க: அதிபர் பதவி ஏற்கும் முன்பே சோதனையா..? சிறைக்கு செல்லும் டிரம்ப்..!
அமெரிக்கா தற்போது உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போதும் இதனை நிரூபித்துள்ளது. ஆனால் கடந்த 80 ஆண்டுகளில் அமெரிக்காவை வேறு எந்த நாடும் நேரடியாக தாக்கிய போர் இல்லை. சமீபத்திய ஆண்டுகளில், ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் அமெரிக்காவிற்கு சவால் விடுகின்றன. தற்போது ரஷ்யா பரப்பளவில் மிகப்பெரிய நாடாகவும், ஆயுதங்களின் அடிப்படையில் 2 வது இடமாகவும் கருதப்படுகிறது.
அதே நேரத்தில், சீனாவும், ஈரானும் கூட அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இல்லை. ட்ரம்ப் அவரது திட்டத்தில் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை அமெரிக்கா எளிதில் சமாளிக்கும். அமெரிக்காவின் தற்போதைய பரப்பளவு 98 லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் சற்று அதிகம். கனடா, கிரீன்லாந்தின் பகுதியும் அதில் சேர்க்கப்பட்டால், முழுப் பகுதியும் சுமார் இருநூற்று இருபது மில்லியன் சதுர கிலோமீட்டர்களாக இருக்கும்.
இது ரஷ்யாவின் பரப்பளவை விட அதிகமாக இருக்கும். இது தவிர மொத்த உள்நாட்டு உற்பத்தி, மக்கள் தொகை, கடல் வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் அமெரிக்கா மிகவும் வலுவான நாடாக மாறும்.
இதையும் படிங்க: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீர் ராஜினாமா...