முன்னாள் காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக தவிர்த்து அனைத்து பிரதான கட்சிகளும் தேர்தலை தவிர்த்து விட்டதால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மட்டும்தான் போட்டி நிலவுகிறது.
இதையும் கடும் போட்டி என்று சொல்ல முடியாது என்பதை அனைவரும் அறிவர். இருப்பினும் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறப்போகிறது என்ற அடிப்படையில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. லயோலா கல்லூரியின் முன்னாள் துறை தலைவரான பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் கள ஆய்வில் ஈடுபட்டு மக்கள் ஆய்வகம் அமைப்பு, தற்போது கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 28 முதல் 31 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் 118 இடங்களில் 1470 வாக்காளர்களை சந்தித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவில் திமுக மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக 59. 5 விழுக்காடு, நாதக 16.7 விழுக்காடு, நோட்டா 2.3 விழுக்காடு வாக்களிக்கவே விருப்பமில்லை என சுமார் 17.6 விழுக்காட்டினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: திமுக,அதிமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் கார்கொடிகள்.!! மொத்தமாக அகற்றப்படுமா??
தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்த அதிமுகவின் வாக்குகளில் 39.2 விழுக்காடு ஓட்டுகள் திமுகவுக்கும், 19.2 விழுக்காட்டினர் நாம் தமிழர் கட்சிக்கும் வாக்களிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் 17.6 சதவீத வாக்குகள் திமுகவுக்கும், 57.9 சதவீத தொண்டர்கள் நாம் தமிழருக்கும் ஓட்டு போடுவோம் என கூறியுள்ளனர். விஜய் கட்சி தொண்டர்களின் வாக்குகளில் 15 புள்ளி இரண்டு சதவீதம் திமுகவுக்கும், 35.8 சதவீதம் நாம் தமிழர் கட்சிக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இது தவிர 2026 இல் முதலமைச்சராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் 31.5 விழுக்காடு, எடப்பாடி பழனிச்சாமி 20.2 விழுக்காடு, சீமான் 8 சதவீதம், அண்ணாமலை 7.9% என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது. அஜித் ரசிகர்கள் 37.4 விழுக்காடு திமுகவுக்கும், 24.9 விழுக்காடு நாம் தமிழர் கட்சிக்கும் ஓட்டு போடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ திமுகவின் ஓட்டு சதவீதம் பல மடங்கு உயர்ந்துள்ளது இந்த இடைத்தேர்தல் முடிவு கருத்துக் கணிப்புகள் காண்பிக்கிறது.
இதையும் படிங்க: மனைவிக்காக, ரூ. 10 லட்சத்துக்கு 'கிட்னி'யை விற்ற கணவர்: பணத்தை எடுத்துக்கொண்டு காதலனுடன் ஓடிய மனைவி!