நேற்று இந்தியாவில் கோலாகலமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. சென்னையில் சௌகார்ப்பேட்டையில் இருக்கும் வட இந்தியர்கள் உடலில் வண்ண கலர்பொடிகளை தூவி ஹோலி கொண்டாடினர். இதேபோல் பாலிவுட் நடிகர், நடிகைகளும் கோலாகலமாக ஹோலி கொண்டாடினர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

அப்போது, பள்ளி மாணவிகள் 7 பேர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அவர்கள் 8 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். அந்த நேரத்தில் பைக்கில் வந்த மாணவர்கள் மாணவிகள் மீது ரசாயனம் கலந்த வண்ணப் பொடிகளை வீசிவிட்டு சென்றுள்ளனர். அந்த நேரத்தில் பேருந்து வரவும் மாணவிகள் அதில் ஏறி புறப்பட்டுள்ளனர். இதை கவனித்த மாணவர்கள் தொடர்ந்து பேருந்தில் ஏறி மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடிகளை தூவி யுள்ளனர்.
இதையும் படிங்க: வியாழக்கிழமை அனைத்து வங்கிகளும் மூடப்படும்.. எங்கெல்லாம் தெரியுமா.? லீவு லிஸ்ட் இதோ!
அதில் ரசாயனம் கலந்திருந்ததால் மாணவிகளுக்கு மூச்சுத்திண்றல் ஏர்பட்டுள்ளது. 7 மாணவிகள் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்ட மாணவிகளை மீட்டு கதக் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

7 மாணவிகளில் 4 மாணவிகளின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு GIMS மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் அந்த பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து, ரசாயன பொடிகளை தூவிவிட்டு தப்பிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காஷ்மீர் பற்றிய பாக். நிலைப்பாட்டை ஏற்கவே முடியாது! இந்தியா திட்டவட்டம்..!