"இங்கிலாந்தில் விடலைப் பருவ இளம் பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது ஆசிய கும்பல் அல்ல; அவர்கள் பாகிஸ்தானிய வம்சாவளி இளைஞர்கள்"0 என்று இந்திய பெண் எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறியிருந்தார். இந்தக் கருத்தை கோடீஸ்வரர் எலான் மஸ்க் ஆதரித்து இருக்கிறார்.
வடக்கு இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக 16 வயதிற்கு உட்பட்ட விடலைப் பருவ இளம் பெண்கள் நீண்ட காலமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்தனர்.

இந்தப் பாலியல் புகார் குறித்து ஏற்கனவே 7 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணை முடிவில் 20 பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த விசாரணையை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியான பழைமை வாத கட்சியும் பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்குரைஞர்களும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இதையும் படிங்க: போதை காளானை மிஞ்சிய குதிரைதாலி..கொடைக்கானலில் போதைக்கு குவியும் இளைஞர்கள்..!

இதற்கிடையில் இந்த பாலியல் பலாத்கார் கும்பல் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டாரர்மர் குற்றம் சாட்டியிருந்தார்.

பிரதமரின் "ஆசிய கும்பல்" என்ற வார்த்தைக்கு இந்தியாவின் கடும் கண்டனம் எழுந்தது. இது குறித்து சிவசேனா (யு பி டி )எம். பி. ஆன பிரியங்கா சதுர்வேதி பதிவிட்ட கண்டனத்தில் "இப்படி பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டக் கூடாது. ஆசிய கும்பல் என்றால் அந்தக் கண்டத்தில் உள்ள இந்தியா போன்ற நாடுகளையும் குறிக்கும்.
முழுமையான முரட்டு தேசமான பாகிஸ்தான் வம்சாவளி கும்பல் தான் இந்த மோசமான செயலில் ஈடுபட்டு வந்ததாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் இந்த பிரச்சினை குறித்து இங்கிலாந்தில் தொடர் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்க், இந்திய எம்பி பிரியங்கா சதுர் வேதியின் எக்ஸ் வலைதள கருத்துக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: சைபர் குற்றங்களை தடுக்கும் போலீஸ் புலிகள் ..முன்னால் டிஜிபி .!