விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன், நேற்று விழுப்புரம் சென்றிருந்தார். அங்கு மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த அவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தகவல் அறிந்து வந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதலா ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் இருவரும் மருத்துவமனை வந்து அவரிடம் நலம் விசாரித்தனர். . மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி என தகவல் பரவியது. ஆனால் மாவட்ட ஆட்சியர் எம்.பி. சு.வெங்கடேசனுக்கு மாரடைப்பு இல்லை என்றும், வாயுத்தொல்லை காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது நலமுடன் உள்ளதாகவும், சிறிது நேர ஓய்விற்குப் பிறகு மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: 6 பேரை காவு வாங்கிய சாத்தூர் வெடி விபத்து; அதிகாலையிலேயே அதிரடி ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை!