நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்த உறுப்பினர்களில் சிலர் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை தெரிவித்தநிலையில் சட்டத்துறை அமைச்சகம் இந்த பதிலை அளித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழு அனுப்பிய ஏராளமான கேள்விகளுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் விரிவான பதிலை அனுப்பியுள்ளது. ஆனால், வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்துவதற்கு மட்டும் நேரடியான பதிலை மத்திய சட்டத்துறை அமைச்சகம் அளிக்கவில்லை. மாறாக, எங்களுக்கும் மீண்டும் வாக்குச் சீட்டு கொண்டுவருவது குறித்த திட்டத்துக்கும் தொடர்பில்லை எங்கள் வரம்புக்கு அப்பாற்பட்டது என்று சட்ட அமைச்சகம் பதில் அனுப்பியுள்ளது.

அது மட்டுமல்லாமல் தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரங்களைப் பயன்படுத்துவதா அல்லது வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்துவதா என்பது நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்ய வேண்டிய அம்சங்களில் இல்லை. நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்த மசோதா, அரசியலமைப்புச் சட்டம் 129 சட்டத்திருத்த மசோதா குறித்துதான் நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆய்வு செய்கிறது. வாக்குச்சீட்டு முறை குறித்து அல்ல என்று சட்டத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 119 செயலிகளுக்குத் தடை! கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு

அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில், பலமுறை, இனிமேல் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கொண்டுவருவதற்கு எண்ணம் இல்லை, உச்ச நீதிமன்றமும் மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்களிக்கும் முறையை ஏற்றுக்கொண்டது என பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வாக்குச்சீட்டு முறையை தேர்தலில் கொண்டுவர வேண்டும் எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மின்ணு வாக்கு எந்திரத்தில் மோசடி நடந்திருக்கும் என்பது இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றக் கூட்டுக் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சகம், சில கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் பெற்றுக்கொள்ளவும் வழிகாட்டியுள்ளது. சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது அல்ல, கூட்டாட்சி கட்டமைப்பை ஒருபோதும் பாதிக்காது என்றும் சட்டஅமைச்சகம் பதில் அளித்துள்ளது.
1951 முதல் 1957 வரையிலான ஆண்டுகளிலும் இந்தியாவில் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடந்துள்ளது. 1968, 1969 ஆகிய ஆண்டுகளில் இருந்துதான் இந்த தேர்தல் முறையில் குழப்பம் ஏற்பட்டது என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்தாகும் அபாயம்: தவிர்ப்பது எப்படி? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு