''விஜய் சுற்றி தவறுகள் நடந்து கொண்டே இருக்கிறது. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை 100 சதவிகிதம் நம்புகிறார் விஜய். ஆனால் விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஸ்வாசமாக இல்லை. பணம், சாதி, விஸ்வாசம் ஆகிய 3 விஷயங்களை அடிப்படையாக வைத்தே பதவி அளிக்கப்படுகிறது. விஸ்வாசம் என்பது விஜய்க்கு விஸ்வாசமாக இருப்பவர்கள் அல்ல. பொதுச்செயலாளர் ஆனந்துக்கு விஸ்வாசமாக இருப்பவர்களுக்கு தான் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பணம் வாங்கிக் கொண்டே பதவி தருகிறார்'' என்றெல்லாம் தவெக நிர்வாகிகள் வீடியோக்கள் வெளியிட்டு, கதறி வருகின்றனர்.

இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் நடத்தும் வசூல் வேட்டை பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருக்கிற அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏ சீட்டிற்கு இப்போது விலையை நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது
இதையும் படிங்க: விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? - செல்லூர் ராஜூ ஓபன் டாக்...!
.
தமிழக வெற்றிக் கழக தலைமை தங்களுக்கு பணம் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடலாம் என்று பல நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடக் காத்திருக்க, சீட்டுக்கு விலையை நிர்ணயித்தது தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்தின் நெருக்கமான ஒருவரிடம் வசூலிக்கும் இந்த பொறுப்பை கொடுத்ததாகவும் அவர் (சஜி)இறந்ததற்குப் பிறகு புஸ்ஸி ஆனந்த் விழி பிதுங்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.(புஸ்ஸி அண்ணே… சஜி இறப்புக்கு சென்றபோது தேம்பி தேம்பி அழுதீர்களே... அதற்கு காரணம் இதுதானா?'' என விஷயத்தை அறிந்தவர்கள் இப்போது பேசி வருகிறார்கள்) ஆனால், குறையாமல் கோடிகளில் பணம் கொடுத்தால் சீட்டு உறுதி என்கிற செய்தி தலைமை காதுக்கு சென்றால் சில பேருக்கு சீட்டு கிடைக்கலாம். இல்லையென்றால் கஷ்டம்தான். பணம் இருக்கிறவர்களுக்கு தான் சீட்டு கிடைக்கும் என்று புலம்பி வருகிறார்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்.

விஜய்யை கவர புஸ்ஸி ஆனந்த் நாடகம் நடத்துகிறார் என விஜய்யின் தந்தை சந்திரசேகர் பேசிய பழைய வீடியோ ஒன்றும் இதனையொட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், புஸ்ஸி ஆனந்தை நான் வேண்டுமென்றே தப்பு சொல்லவில்லை. விஜயை புஸ்ஸி ஆனந்த் எப்படி ஏமாற்றுகிறார் என விஜயின் தந்தை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: தேமுதிக-வை திமுக கூட்டணிக்கு தட்டித் தூக்க வைக்கும் விஜய்..! இப்படியொரு பின்னணியா..?