வக்ஃபு வரைவு அறிக்கை மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 14 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுகையில் “ வக்ஃபு வரைவு அறிக்கை 655 பக்கங்கள் கொண்டது, அதை விரிவாக படிப்பதற்கு கூட நேரம் அளிக்காமல் நேற்று மாலை நோட்டீஸ் அனுப்பி, மறுநாள் காலை 10 மணிக்குள் கருத்துக்களைக் கூற கேட்பது ஜனநாயகவிரோதம்” எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற நிலைக்குழுவில் மொத்தம் 31 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 16 எம்.பி.கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இதில் 12 பேர் பாஜகவினர். 13 எம்.பி.க்கள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ஒருவர் நியமன உறுப்பினர்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பரிந்துரைத்த 44 திருத்தங்களை பாஜக அதன் கூட்டணி கட்சிகள் ஒதுக்கிவிட்டன, மாறாக 14 திருத்தங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. முதல்முறையாக முஸ்லிம்களில் பிற்பட்ட வகுப்பினர், ஏழைகள், பெண்கள், ஆதரவற்றோர் ஆகியோரும் பலன் பெறும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சிவசேனா உத்தவ் கட்சி எம்.பி. அரவிந்த் சாவந்த் கூறுகையில் “ என்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளேன். தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. அரசியல் நோக்கங்களுக்காக இந்த மசோதா அழுத்தம் கொடுக்கப்படுகிறது, நீதி நியாத்துக்காக அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கிறார்கள். வக்ஃபு வாரியம் எப்போதாவது முஸ்லிம் அல்லாதவர்களை இணைத்துள்ளதா, இந்த சட்டம் கோயில்களையும் ஒழுங்குமுறை செய்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசியலமைப்புச் சட்டத்தை முறையாகப் பின்பற்றினால் சமத்துவம் வேண்டும். இந்த சட்டம் வந்தால் இந்துக்கள்கூட எதிர்பார்ப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி கூறுகையில் “ 650 பக்க அறிக்கை நேற்று இரவு கையொப்பமானது. அனைத்து பக்கங்களையும் இரவே படித்து புரிந்து கொள்வது சாத்தியமற்றது. நாடாளுமன்ற நிலைக் குழுவில் என்னால் முடிந்தவற்றை பேசியுள்ளேன். இந்த திருத்தங்கள் அனைத்தும் வக்ஃபு நலனுக்கு உகந்தவை அல்ல என்பதை கண்டுபிடித்தேன். மாறாக வக்ஃபு வாரியத்தை அழிக்கும் செயல்” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: கலாட்டா, கூச்சல், குழப்பம்! வக்ஃபு திருத்த மசோதா குறித்த நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டம் ரத்து

வக்ஃபு வரைவு அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பால், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் நாளை தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
வக்ஃபு திருத்த மசோதா 2024, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குகடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி பரிந்துரைக்கப்பட்டது. வக்ஃபு சட்டம் 1995ல் பல்வேறு திருத்தங்களைச் செய்து, அதை ஒழுங்குமுறைப்படுத்தி, வக்ஃபு சொத்துக்களை முறைப்படுத்தவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.
இதையும் படிங்க: விமான நிலையங்களில் கட்டணக் கொள்ளை: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விளாசல்