12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய 16வது லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.
3 ஓவர்களுக்குப் பிறகு ஸ்கோர் 32 ரன்களை எட்டியுள்ளது.7 ஓவர்களுக்குப் பிறகு, லக்னோ 1 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது.நிக்கோலஸ் பூரனின் விக்கெட்டை வீழ்த்தி ஹர்திக் பாண்ட்யா லக்னோவுக்கு மற்றொரு அடியைக் கொடுத்தார். பூரான் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். 9 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ அணி... 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!
மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வாரி இறைத்த நிலையில் ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அவர் இந்த போட்டியில் ஆறாவது பந்துவீச்சாளராகத்தான் செயல்பட்டார். ஆனால், மற்ற பந்துவீச்சாளர்களை விட அதிக விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே ஐந்து ஒரே போட்டியில் விக்கெட்களை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற மாபெரும் சாதனையை செய்து இருக்கிறார்.

இதற்கு முன் ஐபிஎல் தொடரில் எந்த ஒரு கேப்டனும் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியதில்லை. அனில் கும்ப்ளே இரண்டு முறை 16 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அதுவே இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அதை ஹர்திக் பாண்டியா முறியடித்து இருக்கிறார்.

லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. இதனைடுத்து மும்பை அணி 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டர்க்காரகளான வில்ஜாக்சன் 5 ரன்களிலும், ரியான் 10 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். நமன் 46 ரன்கள் சேர்த்தார். நூறாவது ஐபிர்ல் போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளைல் 67 ரன்களைச் சேர்த்தார். ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 28 ரன்கள், மிட்செல் 2 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே அடித்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 191 ரன்களை மட்டுமே குவித்து மும்பை இந்தியன் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதையும் படிங்க: IPL 2025: வயிற்றுக்குள் போன வெற்றியை கையை விட்டு எடுத்த வீரர்.. யார் இந்த விப்ராஜ் நிகம்.?