சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பிங்க் ஆட்டோ திட்டம் கொண்டுவரப்பட உள்ளது இது தொடர்பான திருத்தம் மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அடுத்த மாத இறுதிக்குள் சென்னையில் பிங்க் ஆட்டோ பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 250 ஆட்டோக்கள் பெண்கள் மூலமாக இயக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த மாத இறுதிக்குள் சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் சமூக நலத்துறையுடன் இணைந்து பெண்களே ஆட்டோ இயக்கக்கூடிய திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறது. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் பிங்க் ஆட்டோ குறித்த அறிமுக நிகழ்வு நடைபெற்றது. அதில் பிங்க் ஆட்டோக்கான மாதிரி ஆட்டோ தமிழக அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது 250 பிங்க் ஆட்டோக்களை சென்னை முழுவதும் பெண்களே இயக்கக்கூடிய வகையில் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.
இதையும் படிங்க: பாரம்பரிய மதுவுக்கு முக்கியத்துவம்; மத்திய பிரதேசத்தில் புதிய கலால் கொள்கை அதிரடி அறிமுகம்

இதற்காக போக்குவரத்துதுறையினுடைய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சமூக நலத்துறை சார்பாக பயிற்சி பெற்றிருக்கக்கூடிய ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கக்கூடிய பெண்கள் இதற்காக விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். தமிழக அரசு சார்பில் விண்ணப்பம் செய்யக்கூடிய நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்குவதற்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், 250 ஆட்டோக்கள் அடுத்த மாதம் சென்னை நகரில் இயக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிங்க் ஆட்டோ இயங்குவதன் மூலமாக அந்த ஆட்டோவில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலமாக அந்த வாகனம் இயங்குவதை கண்காணிக்கக்கூடிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டவுள்ளது. பிங்க் ஆட்டோ பெண்களே இயக்கக்கூடிய வகையில் பாதுகாப்பானதாக இருந்தாலும், போக்குவரத்து துறை மற்றும் சமூக நலத்துறையுடன் இணைந்து ஆட்டோ செல்லக்கூடிய வழியைக் கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த அக்டோபர் மாதம் இது தொடர்பான அறிமுக நிகழ்வு நடத்தியதற்கு பிறகு அடுத்த மாதம் 250 ஆட்டோக்களை இயக்குவதற்கான நடவடிக்கை உறுதி செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாஜக ஆட்சிக்கு வந்த முதல்நாள் - அண்ணாமலை எடுத்த சபதம்...!