கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக இடையே வெடித்த மோத பெரிதானது. அப்போதைய பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவையும், அக்கட்சியின் தலைவர்களையும் விமர்சித்து வந்ததால் கூட்டணி முடிவுக்கு வந்தது. நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவுடன் இனி எப்போது கூட்டணி இல்லை என்று அறிவித்து தேர்தலை சந்தித்தது. தொடர்ந்து அதிமுகவினர், பாஜகவினருக்கு எதிராக விமர்சனங்களை வைத்தனர்.

கடந்த மாதத்திற்கு முன்னதாக கூட இனி பாஜகவுடன் எக்காரணம் கொண்டும் கூட்டணி இல்லை என பேசி வந்த அதிமுக, திடீரென பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அமைதிப்படுத்தும் முயற்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு பல கட்சிகள் வரும் என்று அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

நேற்று சென்னையில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “தமிழகத்தில் மிகப்பெரிய ஜாம்பவான் கட்சிகள் எல்லாம் நம்முடன் வரும் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார். அவர் சொன்னது போன்று தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அப்படி அவர்கள் வந்துவிட்டால் நாமலாம் வேலை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அதிமுகவுடன் மிகப் பெரிய கட்சியான பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வந்துவிட்டது. அதனால் இவர்களுக்கே ஓட்டு போடுவோம் என்று மக்கள் ஓட்டுப்போட்டுவிட்டு செல்வார்கள்.
அதனால் ஓரளவுக்குப் பணமும் மிச்சமாகும் என்று நினைக்கிறேன். அந்தளவிற்கு ஒரு அரசியல் சாணக்கியத்துடன் எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார். நீங்கள் இருக்கும் அமாவாசை விரதம் எல்லாம் அவருக்கு சாதகமாகவே வரும். நிச்சயமாக 2026ல் அதிமுக கூட்டணியைத் தான் மக்கள் தேர்வு செய்வார்கள்”என்றார். இதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சைத்தான் கூட்டணி என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்... இரவோடு, இரவாக பேசி முடிக்கப்பட்ட டீல்... பரபரப்பு பின்னணி!
இதையும் படிங்க: “வஞ்சக பாஜக- துரோக அதிமுக” - கையில் துண்டு பிரசுரத்துடன் வீடு, வீடாக படையெடுக்கும் திமுக!