2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 2ல் வெற்றி, 7ல் தோல்வி என 4 புள்ளியுடன் 9வது இடத்தில் இருக்கிறது.

அதேநேரத்தில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து குஜராத் அணி தொடக்க வீரர்களாக சாய் சுதர்ஷன் மற்றும் கில் களமிறங்கினர். சாய் சுதர்ஷன் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க: வார்னரின் சாதனையை முறியடித்த கோலி... ஐபிஎல்-லில் நடந்த சுவாரஸ்யம்!!

கில் அபாராமாக ஆடி 50 பந்துகளில் 5 பவுண்ட்ரிகள் 4 சிக்ஸர்கள் அடித்து 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் 8 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட் ஆனார். அவரை தொடர்ந்து ராகுல் தெவாட்டியாவும் 9 ரன்களில் ஆவுட் ஆனார். இதனால் அணியின் ஸ்கோர் உயராமல் இருந்த நிலையில் ஜோஸ் பட்லர் - சாருக்கான் கூட்டனி அமைந்தது. ஜோ ஸ் பட்லர் தனது அதிரடி ஆட்டத்தால் 3 பவுண்ட்ரிகள் 4 சிக்ஸர்கள் விளாசினார்.

26 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். சாருக்கான் 5 ரன்கல் சேர்த்திருந்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் 84 ரன்களும், ஜோஸ் பட்லர் 50 ரன்களும் அடித்தனர். குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் தரப்பில் மகிஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளும், ஆர்ச்சர், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதை தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.
இதையும் படிங்க: மழையால் கைவிடப்பட்ட KKR – PBKS ஆட்டம்… இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி!!