2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து குஜராத் அணி தொடக்க வீரர்களாக சாய் சுதர்ஷன் மற்றும் கில் களமிறங்கினர். சாய் சுதர்ஷன் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கில் அபாராமாக ஆடி 50 பந்துகளில் 5 பவுண்ட்ரிகள் 4 சிக்ஸர்கள் அடித்து 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் 8 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட் ஆனார்.

அவரை தொடர்ந்து ராகுல் தெவாட்டியாவும் 9 ரன்களில் ஆவுட் ஆனார். இதனால் அணியின் ஸ்கோர் உயராமல் இருந்த நிலையில் ஜோஸ் பட்லர் - சாருக்கான் கூட்டனி அமைந்தது. ஜோ ஸ் பட்லர் தனது அதிரடி ஆட்டத்தால் 3 பவுண்ட்ரிகள் 4 சிக்ஸர்கள் விளாசினார். 26 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். சாருக்கான் 5 ரன்கல் சேர்த்திருந்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் 84 ரன்களும், ஜோஸ் பட்லர் 50 ரன்களும் அடித்தனர். குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் தரப்பில் மகிஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளும், ஆர்ச்சர், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதையும் படிங்க: அடித்து துவைத்த குஜராத் அணி... ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்கள் இலக்கு; வெற்றி யாருக்கு?

இதை தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சூரியவன்ஷி மற்றும் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வாலும் களமிறங்கியது. சூரியவன்சி 17 பந்துகளில் அரை சதம் விளாசி சாதனை படைத்தார். இதில் மூன்று பவுண்டரிகளும், ஆறு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் டி20 கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அரை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை சூரியவன்சி படைத்திருக்கிறார். மேலும் அதிவேகமாக ஐபிஎல் தொடரில் அரை சதம் விளாசிய 14 வது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

35 பந்துகளில் சதம் விளாசினார். ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 2வது அதிவேக சதம் இதுவாகும். டி20 வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இறுதியில் 38 பந்தில் 101 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரியும், 11 சிக்சர்கள் அடங்கும். இவரது அபார ஆட்டத்தை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதற்கு சூர்யவன்ஷியும் நன்றி தெரிவித்துள்ளார். இறுதியில் ரியான் பராக் 15 பந்தில் 32 ரன்கள் எடுக்க,ஜெய்ஸ்வால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 15.5 ஓவரில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் ராஜஸ்தான் 3வது வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க: வார்னரின் சாதனையை முறியடித்த கோலி... ஐபிஎல்-லில் நடந்த சுவாரஸ்யம்!!