ஆட்சியின் முதல் இரண்டு விக்கெட்டுகள் தற்போது விழுந்திருக்கின்றன. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருக்கும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரையில் பாஜக சார்பில் அம்பேத்கர் ஜெயந்தி விழா கருத்தரங்கு நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஊடகம் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் திருமாவளவன், சீமான், சித்தராமையா, கம்யூனிஸ்ட் கட்சிகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. நாட்டு மக்கள் மீது இவர்களுக்கு அக்கறையே கிடையாது.p

உலகளவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தலைமையேற்று நடத்தும் பெரும்பாலான அமைப்புகள் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகின்றன. அமெரிக்காவில் இருப்பவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் தான். இருந்தாலும் அவர்கள் யாரும் அமெரிக்காவை தாக்கிப் பேசுவதில்லை. ஆனால், இந்தியாவில் இருப்பவர்களோ தனது நாட்டுக்கு எதிராக பேசி வருகின்றனர். பாஜக மட்டும் தான் சட்டத்தை மதித்து நடக்கும் கட்சி ஆகும். அரசியல் சட்டத்தை இந்திரா காந்தி சிதைத்தபோது அவருடன் இருந்தவர் ப.சிதம்பரம்தான்.

திமுகவில் தற்போது 2 விக்கெட்டுகள் விழுந்திருக்கின்றன. நீதிமன்ற தீர்ப்பால் முதல்வர் ஸ்டாலின் உளறிக் கொண்டிருக்கிறார். திராவிட அரசியலே மத வெறிதான். வெறுப்பு அரசியலின் மூலதனமாக இருப்பது திராவிட இயக்கங்கள்தான். முதல்வர் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது” என்று ஹெச்.ராஜா கூறினார்.
இதற்கிடையே சோஷியல் மீடியா பக்கத்தில் ஹெச். ராஜா வெளியிட்டுள்ள பதிவில், "ஊழல்! ஊறல்! போதை! ஆட்சியின் முதல் இரண்டு விக்கெட்டுகள் தற்போது விழுந்திருக்கின்றன. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருக்கும்.! " என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரு அமைச்சர்கள் நீக்கம்.. 2026இல் திமுக ஆட்சி அகற்றத்துக்கான தொடக்கப்புள்ளி.. அண்ணாமலை சரவெடி.!
இதையும் படிங்க: டெல்லியில் ட்ரிபிள் இஞ்சின் ஆட்சி... டெல்லி மேயர் பதவியையும் தட்டித்தூக்கிய பாஜக..! ஆம் ஆத்மி வாஷ் அவுட்..!