திமுக கூட்டணி கட்சிகள் கசப்பான மனநிலையில் இருக்கின்றன என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கூறினார்.

சென்னையில் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திருமாவளவன் என்னுடைய நண்பர்தான். ஆனால், நாங்கள் அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்கள். திருமாவளவன் தெரிவிக்கும் கருத்துகள், அவர் தெளிவற்ற நிலையில் இருப்பதைப் பிரதிபலிக்கிறது. அதிமுக அனைவரையும் மதிக்கும் பண்பை கொண்ட கட்சி. அது சிறிய கட்சிகளாக இருந்தாலும் சரி, உரிய மரியாதையைக் கொடுப்போம். ஆனால், திமுகவில் அப்படி இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை.
இதையும் படிங்க: இரு அமைச்சர்கள் நீக்கம்.. 2026இல் திமுக ஆட்சி அகற்றத்துக்கான தொடக்கப்புள்ளி.. அண்ணாமலை சரவெடி.!
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கசப்பான அனுபவத்தோடும், கசப்பான மனநிலையோடுதான் கூட்டணியில் இருக்கின்றன." என்று ஜெயக்குமார் தெரிவித்தார். அப்போது அவரிடம் விசிக அதிமுக கூட்டணிக்கு வருமா என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார்," சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன. இந்தக் காலகட்டத்தில் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படலாம்.

எதிர்காலத்தில் எந்தெந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும் என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது. ஆனால், 2026 தேர்தலுக்கு அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று எங்கள் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வர வாய்ப்புகள் உள்ளன" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
.
இதையும் படிங்க: அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, செந்தில் பாலாஜி.. பதவியைப் பதம் பார்த்த வழக்கும் வாய்த் துடுக்கும்.!