60 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றிய மருத்துவர் சாந்தா புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இந்திய அளவில் முன்னோடியாக கருதப்பட்டவர்.

மருத்துவர் சாந்தா பணியில் சேர்ந்த போது வெறும் 12 படுக்கைகள் மட்டுமே கொண்ட சிறிய மருத்துவமனைக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை செயல்பட்டு வந்துள்ளது. அப்போது பலரின் உதவியோடு அந்த மருத்துவமனையை சர்வதேச அளவில் வளர்த்தெடுத்த பெருமைக்கு உரியவர் மருத்துவர் சாந்தா.
இதையும் படிங்க: திமுக அரசின் மீது அமைச்சர்களுக்கே அதிருப்தி.. வானதி சீனிவாசன் பரபரப்புக் குற்றச்சாட்டு.!!

புற்று நோயியல் என்ற துறையில் ஆழ்ந்து படித்து, தனிப்பட்ட படிப்பாகவும் ஆராய்ச்சி படிப்பாகவும் மாற காரணமாக இருந்தவர். ஆயிரம் மருத்துவப் பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் அடையாறு மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்பெறும் இடமாக மாற்றிய பெருமைக்கு உரியவர். பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளையும், தமிழக அளவில் ஔவையார் விருதையும் பெற்ற மருத்துவர் சாந்தா கடந்த 2021 ஆம் ஆண்டு காலமானார்.

இந்த நிலையில் மறைந்த மருத்துவர் சாந்தாவிற்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உருவச்சிலை மற்றும் நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

அதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து மருத்துவர் சாந்தாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.எ.ரவி கூட்டும் மாநாடு.. துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா.? முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?