காவல்துறையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எந்த மாநிலமும், யூனியன் பிரதேசமும் முழுமையாக நிரப்பவில்லை என்று 2025ம் ஆண்டுக்கான இந்திய நீதித்துறை அறிக்கை (ஐஜேஆர்) தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது நாட்டில் 20.30 லட்சம் பெண்கள் காவல்துறையில் பணியாற்றினாலும், அதில் 1000க்கும் மேலேதான் பெண்கள் மூத்த உயர் அதிகாரிகள் பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கென காவல்துறையில் ஒதுக்கப்பட்ட இடஒதுகீட்டை எந்த மாநிலமும் நிரப்பவில்லை என்று ஐஜேஆர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐஜேஆர் 2025 அறிக்கையை டாடா அறக்கட்டளை சார்பில் பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் சேர்ந்து கூட்டாக ஆய்வு நடத்தி வெளியிடுகின்றன. இந்த அறிக்கையில் காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை மற்றும் சட்ட உதவிகள் கணக்கில் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.
இதையும் படிங்க: ராம நவமியன்று ரத யாத்திரைக்கு NO சொன்ன காவல்துறை..!
இந்த அறிக்கையின்படி, நாட்டிலேயே சிறையில் அதிகமான கைதிகள் இருக்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம்தான். இந்த மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத்திலும் நீதிபதிகளுக்கான உரிய இடங்களில் பாதி இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. டெல்லி மாநில சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளில் 91%பேர் விசாரணைக் கைதிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைகளை சிறப்பாகப் பராமரித்தலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. சிறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது, நிதியை சிறப்பாக பயன்படுத்தியதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.இருப்பினும் சிறைத்துறையில் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. 22 கைதிகளுக்கு ஒரு அதிகாரி என்ற ரீதியில் சிறை நிர்வாகம் செயல்படுகிறது. நாட்டிலேயே அதிகாரிகளுக்கு அளவான சிறந்த பணிச்சுமையை தமிழக சிறைத்துறை வழங்குகிறது.
காவல்துறை நிர்வாகத்தில் கடந்த 2024ம் ஆண்டில் 3வது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு 13வது இடத்துக்கு சரிந்துள்ளது. பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பயிற்சி ஆகியவற்றில் மோசமாக செயல்பட்டதை காரணமாகும். அதேபோல சட்ட உதவிகளை வழங்குவதிலும் தமிழகம் மோசமாக இருக்கிறது, 12வது இடத்திலிருந்து 16வது இடத்துக்கு சரிந்துள்ளது.

காவல்துறை மற்றும் நீதித்துறையில் உரிய இடஒதுக்கீட்டை நேர் செய்த ஒரே மாநிலம் கர்நாடகதான். மாநில காவல்துறையில் பெண்களின் பங்கு அதிகமாகும். விசாரணை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 71% வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடங்கள், ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது குஜராத்தில் மட்டும்தான்.
இந்தியாவில் 17 சதவீத காவல் நிலையங்களில் ஒரு கண்காணிப்பு கேமிரா கூட பொருத்தப்படவில்லை. 10 காவல்நிலையங்களில் 3 காவல் நிலையங்களில் பெண்களுக்கென தனியாக உதவிமையம் இல்லை. தேசிய தனிநபர் வருவாயில் சட்ட உதவிக்கு ஆண்டுக்கு ரூ.6 மட்டுமே செலவிடப்படுகிறது. மோசமாகும். தனிநபர் ஒருவருக்கு சிறை நிர்வாகம் சார்பில் ரூ.57 செலவிடுகிறது. 2022-23ல் தேசிய சராசரி ஒரு கைதிக்கு அதிகப்படுத்தப்பட்டு ரூ.38028 லிரிருந்து ரூ.44110 ஆக அதிகரித்தது. ஆந்திரப்பிரதேசத்தில்தான் ஆண்டுககு அதிகபட்சமாக ரூ.267673 செலவிடப்படுகிறது.

நீதித்துறையில் தனிநபர் செலவு ரூ.182 ஆக இருக்கிறது. எந்த மாநில அரசும் தங்கள் ஆண்டு செலவில் ஒரு சதவீதத்துக்கு அதிகமாக நீதித்துறைக்கு செலவிடவில்லை. இந்தியாவைப் பொருத்தவரை 831 மக்களுக்கு ஒருகாவலர் மட்டுமே இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் மகள் நீலா ராஜேந்திராவை தூக்கி எறிந்த டிரம்ப்..! நாசாவில் சர்ச்சை..!