சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து, எழுத்தாளரும் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான திலக் தேவாஷர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியா எடுத்துள்ள 5 நடவடிக்கைகளும் பாகிஸ்தானுடனான ஒப்பந்த விதிகளை மாற்றிவிட்டது என்பதையும், இனி வழக்கம் போல் வணிகம் இல்லை என்பதையும் காட்டுவதாக தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானிடமிருந்து பலமுறை ஆட்சேபனைகளை எதிர்கொண்ட மேற்கு நதிகளில் (கிஷங்கங்கா மற்றும் ரேட்டில் திட்டங்கள் போன்றவை) நீர் மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களைத் தொடர இந்தியா இப்போது சுதந்திரமாக உள்ளது என தெரிவித்தார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட முடிவு என்பது, இதனை பெரிதும் நம்பியுள்ள பாகிஸ்தானுக்கு ஒரு வலுவான சமிக்ஞை என்றும் பாகிஸ்தான் விவசாயிகள் மீதான உளவியல் தாக்கமாக இருக்கும் என்றும் கூறினார். இந்தியாவின் பதிலடி தேசிய கோபத்தின் வெளிப்பாடு என்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தனிமைப்படுத்த பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் உச்சகட்ட பதற்றம்..! பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்ட பாஜக..!
இதையும் படிங்க: கெடு விதித்த மத்திய அரசு..! இந்தியாவை விட்டு வெளியேறி வரும் பாகிஸ்தானியர்கள்..!