பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரசு எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவு தெரிவிப்போம் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் உறுதியளித்துள்ளன.
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, திரினாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே பி நட்டா, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் பங்கேற்று, அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கினர்.

இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அனைத்து கட்சி கூட்டத்தில் ஒவ்வொருவரும் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்தோம். இந்த விஷயத்தில் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஆதரவு அளிப்போம்" தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே கூறுகையில்," அனைத்து கட்சி கூட்டம் தீவிரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தது. ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினோம்" என்று தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பண்டோபாத்யா பேசுகையில்,"பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி கூட்டத்தில் ஆலோசித்தோம். அரசின் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அழைக்கும் என்று கூட்டத்தில் உறுதியளித்தோம். நாட்டின் நான்கு கருதி அரசு எந்த முடிவை எடுத்தாலும் அதை ஆதரிப்போம்" என்று தெரிவித்தார். ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், "ஒட்டுமொத்த தேசமும் கோபத்திலும் சோகத்திலும் உள்ளது. மத்திய அரசு தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி வழங்க வேண்டும் என்று தேசம் எதிர்பார்க்கிறது. தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களை கொன்றுள்ளனர். பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்
இதையும் படிங்க: இந்தியாவுடன் கைகோர்க்கும் G20 நாடுகள்.. டெல்லியில் இந்திய அதிகாரிகளுடன் G20 நாட்டு தூதர்கள் சந்திப்பு!
இதையும் படிங்க: காஷ்மீர் மக்களை எதிரிகளாகப் பார்க்காதீர்கள்.. காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உருக்கமான வேண்டுகோள்.!